
பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கி வந்த நிலையில், அண்டை நாடான இந்தியா அதை நிரூபித்ததால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த நாட்டின் 73-வது சுதந்திர தின நிகழ்ச்சியின் போது, ‛ இந்திய பிரதமர் மோடி-யின் ஆட்சியில், சென்ற 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக தற்போது மாறியுள்ளது. அதனால் பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு இணையாக வலிமையை கூட்ட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடல் இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் திறம்பட்ட ஆட்சியில் இந்திய அரசு வலிமை அடைந்திருப்பாதால் பாகிஸ்தான் ராணுவம் பலத்தை கூட்ட வேண்டும் என்று இம்ரான் தன்னுடைய அச்சத்தை அந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் அத்துமீறல்கள் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் மோடி அரசு பாகிஸ்தானின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து முற்று புள்ளி வைத்து வருகிறது. இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பாகிஸ்தான் படையினை ஒடுக்க இந்திய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு அதிகாரத்தையும் வழங்கி உள்ளது.

2016-ஆம் ஆண்டில் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு சில நாட்களிலேயே இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்14-ஆம் தேதி எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் நம் இந்திய வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
ஆனால் 12 நாட்களிலேயே இந்திய விமானப் படை பாலகாட் பகுதியில் குண்டு மழை பொழிந்தது. இதில் 300-கும் அதிகமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை முதலில் மறுத்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது அதை ஒத்துக் கொண்டுள்ளது.

அடுத்த சில மாதங்களிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. பாகிஸ்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரத்தில் இந்தியா உறுதியாக இந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தினை பல்வேறு யுக்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கி வந்த நிலையில் இந்தியா அதை நிரூபித்ததால் பாகிஸ்தான் உலக நடுகளின் கண்களில் கருப்பு பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
