இதுவரை நாம் வாழும் இந்த பூமியில் வந்த நோய்கள் எந்த வருடத்திலிருந்து எந்தவருடம் வரை இருந்துள்ளது – அந்த நோய்களால் பூமியில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை என்ன என்பது பற்றிய விவரங்கள்.
என்செபாலிடிக்: இந்த நோய் பூமியில் 1915-ஆம் ஆண்டுமுதல் 1926-ஆம் ஆண்டுவரை நீடித்துள்ளது, அந்த நோயால் அன்று வாழ்ந்து கொண்டிருந்த 15 -லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
ஸ்பானிஷ் காய்ச்சல்: இதுதான் இந்த பூமியில் வந்ததிலேயே மிகப்பெரும் கொடிய நோய், இந்த நோயானது 1918-ஆம் ஆண்டுமுதல் 1920-ஆம் ஆண்டுவரை படுகோரமாக அன்று வாழ்ந்த மக்களிடயே கோரதாண்டவம் அடியுள்ளது. இந்த நோயினால் சுமார் 10 கோடி மக்களுக்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
ஆசிய காய்ச்சல்: இந்த காய்ச்சல் நோயானது 1957- ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1958-ஆம் ஆண்டுவரை நீடித்துள்ளது, இந்த நோயால் சுமார் 20-லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
ஹாங்காங் காய்ச்சல்: 1968-களில் ஆரம்பித்த இந்த நோயானது 1969-ஆம் ஆண்டு வரை அதிதீவிரமாக பரவி சுமார் 10-லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை காவு வாங்கியுள்ளது.
எச்1 என் 1 தொற்றுநோய்: இந்த தொற்று நோயானது 2009-ஆம் ஆண்டு வந்துள்ளது அதனால் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
கொரோனா தொற்றுநோய்: தற்போது 2019 ஆம் ஆண்டு நாம் வாழும் இந்த பூமியில் ஆரம்பித்த இந்த கொரொனா தொற்று நோயானது ஆதி தீவிரமாக பரவி அதிக மக்களை காவு வாங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி இதுவரை இந்த நோயினால் சுமார் 19.19-லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.