
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் ஆன்லைனுக்கு அனைத்து வணிக நிறுவனங்களும் மாற விரும்புவதால் அதற்கான சேவைகளை செய்து தரும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வேலைக்கு ஆள் எடுப்பதில் ஆதிதீவிரம் காட்டி வருகின்றது.
இப்போதைக்கு வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ள முக்கியமான தொழில் என்றால் இந்த பி2பி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான். பி 2 பி ஸ்டார்ட்அப்களான சிக்ஸி, ரேபிட் டெலிவரி, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, சிம்பிளிலார்ன், இன்ஸ்டாமோஜோ மற்றும் ஃபோன்பே போன்ற நிறுவனங்களில் அதிக ஆட்களை வேலைக்கு எடுக்க விரும்புகின்றது.
தயாரிப்பு மேம்பாடு(Production Development), வணிக செயல்பாடுகள்(Business Operations), தொழில்நுட்பம்(Technology) , பகுப்பாய்வு(Analytics) , விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்(Sales and Marketing) போன்ற பிரிவில் சுமார் 1,500 வேலைவாய்ப்புகள் உள்ளன. ஊதியம் ஆண்டுக்கு ரூ .10 லட்சத்தில் தொடங்கி ரூ .20-30 லட்சம் வரை தர தயாராக உள்ளன.

ஓயோ, க்யூர்ஃபிட், ஸ்விக்கி மற்றும் பவுன்ஸ் போன்ற நிறுவனங்கள் அலுவலக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் இந்த நேரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக ஆட்களை வேலைக்கு சேர்க்க விரும்புகின்றது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் இடப்பட்ட லாக்டவுனால், எல்லா தொழில்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஃபைன்டெக் (Fintech), லாஜிஸ்டிக்ஸ்(Logistics) மற்றும் எடெக் (Edtech) ஆகிய பணிகளை மேற்கொள்ளும் பி 2 பி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இந்த லாக்டௌன்பாதிக்கவில்லை என்கிறார்கள் வணிக நிபுணர்கள். இப்போது தான் அந்நிறுவனங்களுக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே தங்கள் தொழில்களில் வேகத்தை அதிகரிப்பதற்காக பணியாளர்களை அதிகரிக்க விரும்புகின்றன அன்த நிறுவனங்கள்.
புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள், என்.பி.எஃப்.சி மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் பெங்களூரை தலமையகமாகக் கொண்ட சிக்ஸி, அதன் தயாரிப்பு, தகவல் பாதுகாப்பு மற்றும் விற்பனைக் குழுக்களில் தேவைகளைப் பூர்த்தி செய்ய 60 ஆட்களை பணியில் நியமிக்க உள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் கோஃபவுண்டர் அங்கித் ரத்தன் அறிவித்துள்ளார்.

இதனிடையேவாடிக்கையாளர் சேவை, கணக்குகள், வணிக மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அடுத்த ஒரே ஆண்டில் 500 ஊழியர்களை நியமிக்க லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ரேபிட் டெலிவரி திட்டமிட்டுள்ளது. எடெக் நிறுவனம் தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து வருவதால் கூடுதலாக 300 ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இன்ஸ்டாமோஜோ நிறுவனம் தனது தயாரிப்பு, பொறியியல், சந்தைப்படுத்தல் மற்றும் ஆதரவு செயல்பாடுகளை விரிவாக்க அதிக ஆட்களை நியமிக்க பார்க்கிறது. இதேபோல் ரேஸர்பே 100 ஆட்களை பணியமர்த்த விரும்புகிறது, ஆனால் முதன்மையாக தயாரிப்பு மற்றும் பொறியியல் குழு தான் அவர்களுக்கு தேவையாம். கேஷ்ஃப்ரீ தனது தொழில்நுட்ப மற்றும் வணிக நடவடிக்கைக் குழுக்களுக்காக 70 பணியாட்களை இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த விரும்புகிறது. இந்த தகவலை அதன் கோஃபவுண்டர் ரீஜு தத்தா அறிவித்துள்ளார்.
ஃபோன்பே நிறுவனம் புதிததாக 360 ஆட்களை வேலைக்கு எடுத்து அதன் எண்ணிக்கையை 1,800 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, டெக்னாலஜி, அனாலிசஸ் மற்றும் ப்ரொடக்சன் மற்றும் சட்டம், நிதி மற்றும் மார்க்கெட்டிங் போன்றவற்றில் அதிகம் பணியாட்களை நியமிக்க விரும்புகிறது லாஜிஸ்டிக்ஸ் சாஸ் தளமான ஃபார்இ, அதன் ஆர் & டி, தயாரிப்பு மேலாண்மை மற்றும் தொழில்முறை சேவை குழுக்களுக்காக அடுத்த ஆண்டில் 100 பணியாட்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.. அமெரிக்க மற்றும் கோஃபவுண்டர் குஷால் நஹாட்டா இதனை அறிவித்துள்ளார். தற்போதைய நிலையில் வணிக நிறுவனங்கள் தங்கள் தொழிலை ஆன்லைன் மயமாக்க விரும்புகின்றன. எனவே அந்த துறையில் ஈடுபடும் நிறுவனங்களின் எதிர்காலம், அதில் பணிபுரியும் பணியாளர்களின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்று கணிக்கபடுகிறது.
