
தமிழில் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகின்ற பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும், இதற்கான முன் ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இணையதளத்தில் தகவல்கள் உலா வருகிறது.

திருமண தேதியை ரகசியமாக வைத்து இருப்பதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நடிகை நயன்தாரா தரப்பில் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நடிகை நயன்தாராவுக்கு இப்போது வயது 36 ஆகிறது. 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இன்றுவரை தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா.

ஏற்கனவே இரண்டு முறை காதலில் சிக்கி பின்பு முறிவு ஏற்பட்ட பிறகும் அவரது சினிமா வாழ்க்கை சரியவில்லை. 2015-ஆம் ஆண்டு “நானும் ரவுடிதான்” என்ற படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் மறுபடியும் காதல் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது ஜோடியாக வலம் வரும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களது சமூக வலைத்தள பக்களிலிருந்து வெளியிட்டு வருகின்றனர்.

அவர்கள் இருவரும் புதிய பட நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது அடுத்த மாதம் திருமணத்துக்கு தயாராவதாக புதிய தகவல்கள் உலா வருகிறது. தற்போது நடிகை நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகின்றார். மேலும் மலையாளத்திலும் இரண்டு படங்களில் அவர் நடிக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.
