
தமிழ் சினிமாவான ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தன்னுடைய முதல் படத்திலையே மிக பிரபலமாகிவிட்டார். மதுரையை தன் பூர்விகமாக கொண்ட இவர் படித்துவளர்ந்தது எல்லாமே அயல்நாட்டில்தான்.

இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற படத்திலும், மற்றும் திமுக உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் என்ற படத்திலும் தொடர்ந்து நடித்திருந்தார். தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல், ஜகஜால கில்லாடி, பார்ட்டி என மூன்று படங்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு காத்திருக்கின்றன.

இந்த நிலையில், இவரது அடுத்த இலக்கு, ஹிந்தி படவுலகான பாலிவுட்டையும் தாண்டி ஆங்கில படவுலக்கான ஹாலிவுட்டில் நடிப்பது தான் அவரது குறிக்கோள். அதற்கான தீவிர முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். தற்போது ஆங்கில படவுலகான ஹாலிவுட் படம் ஒன்றில் தற்போது கமிட் ஆகி உள்ளார்.

இந்த நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்திய செய்தி நிறுவனம் ஒன்றில் பேட்டி கொடுத்த போது, “கதைக்கு தேவை என்றால் நான் கவர்ச்சி காட்டவும் ரெடி என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், எனக்கு அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை. நான் ஒரு பொம்பள விஜய் சேதுபதியாக வலம் வர வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
