சென்ற இரு மாதங்களாக மாயமாகியுள்ள அலிபாபா அதிபர் ஜாக் மா, கைது செய்யப்பட்டு, சீன ஜெயிலில் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
சீனாவின், முதல் தர பணக்காரரான அலிபாபா அதிபர் ஜாக் மா, சீன அரசு வங்கி மற்றும் நிதித் துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான செயல்பாடுகளை குறித்து பல விமர்சனங்களை வைத்ததால், சீன அரசு அதிபரின் கோபத்திற்கு ஆளானார் அலிபாபா அதிபர் ஜாக் மா. இதனையடுத்து, சீன அரசு, ஜாக் மாவின், “ஆன்ட்” நிறுவன பங்கு வெளியீட்டை தடை செய்தது.
அலிபாபா அதிபர் ஜாக் மாவின் அலிபாபா குழும நிறுவனங்களில், சட்டமீறல்கள் நடந்ததுள்ளதாக கூறி, அலிபாபாவுக்கு அபராதம் விதித்து, மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்ற இரண்டு மாதங்களாக, அலிபாபா அதிபர் ஜாக் மா, எந்த ஒரு பொது நிகழ்ச்சியிகளிலும் பங்கு கொள்ளவில்லை. இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின், “பீப்பிள்ஸ் டெய்லி” பத்திரிகை, அலிபாபா அதிபர் ஜாக் மா, கண்காணிப்பு வளையத்தில் உள்ளதாக அறிவித்திருந்தது
சீன அரசு, சமூகத்தில் மதிப்புமிக்கவர்களை கைது செய்ய நேர்ந்தால், அவர்களை கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரும். மேலும் அவர்கள் குறித்த எந்த விபரங்களையும் வெளியிடாது. அதன்படி, அலிபாபா அதிபர் ஜாக் மா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைபட்டிருக்கவோ அல்லது அவரை அவரது வீட்டுக் காவலில்வைத்து இருக்கவோ அதிகம் வாய்ப்பு உள்ளதாக, ஹாங்காங்கின், செய்தி நிறுவனமான “தி ஏஷியா டைம்ஸ்” அவ்ராகளது பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அலிபாபா அதிபர் ஜாக் மாவை “குதிரை மாமா” என்ற அடைமொழியில் அழைத்த சீன பத்திரிகைகள், தற்போது, அவரை மக்கள் பணத்தை உறிஞ்சும் “ரத்தம் குடிக்கும் காட்டேரி” என செய்திகள் வெளியிட்டு வசைபாட ஆரம்பித்துள்ளன.