
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள இந்நிலையில், கட்சி தொடங்கப்படும் தேதியை சென்ற டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றும், அதிசியம் அற்புதம் நிச்சயம் நிகழும் என்றும், இப்ப இல்லண்ணா எப்பவும் இல்ல என்றும் கூறி பெரும் அரசியல் முழக்கத்தை வெளியிட்டு இருந்தார். சென்ற டிசம்பர் 31 ஆம் தேதியை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இலவுகாத்த கிளி போல் காத்துகொண்டு இருந்தனர்.

ஆனால், நடிகர் ரஜினிகாந்த், அவருடைய உடல் பலகீன நிலை காரணமாக தன்னால் அரசியலுக்கு வர இயலவில்லை என்றும், தன்னை தமிழக மக்களும், எனது ரசிகர்களும் மன்னிக்க வேண்டும் என்றும் தனது டிவிட்டர் பதிவில் எழுத்து மூலம் தெரிவித்து இருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

ஆனால் தற்போது நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அவர்களது அறிக்கையில், நம் மக்கள் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் வரும் 20.1.2021 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளி வருகிறது.

இந்த கூட்டத்தில், நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி, நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் பங்கு கொள்ளக் கூடாது. அவ்வாறு மீறி கலந்துகொள்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
