பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் திரையரங்குகளில் அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரைப்படம் வெளியானது.
கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் பெரும் வசூலை குவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வசூலை கண்டு கன்னட திரை உலகமே நடுங்கி போய் உள்ளது. கே.ஜி.எஃப் படம் பாகுபலியை விட நன்றாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டது.
மேலும் கன்னட பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 129 கோடி வசூல் செய்துள்ள படம் பாகுபலி II ஆகும். இதனை கே.ஜி.எஃப் படம் முறியடித்தது. கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது, இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் வீடியோ அப்டேட் வரும் 8-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.