
இந்தியாவின், பார்மசுடிக்கல்ஸ் நிறுவனங்களான பாரத் பயோடெக் மற்றும் சீரம் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வைத்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு தற்போதுஅனுமதி வழங்கியுள்ள இந்நிலையில், வரும் 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, தடுப்பூசிகளை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், அடுத்து வருகின்ற 10 நாட்களில் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 13-ஆம் தேதி, முதல்கட்டமாக கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவித்துள்ளார். இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் ஆகிய 4 இடங்களில் கொரோனா நோய் தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் DCGI-படி, கோவிஷீல்ட்(Covishield) மற்றும் கோவாக்சின்(Covaxin) இரண்டையும் இரண்டு அளவுகளில் நிர்வகிக்க வேண்டும், மேலும் இந்த தடுப்பூசிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்க முடியும். அதிக ஆபத்துள்ள குழுக்கள் ஏற்கனவே மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதையும், இந்த குழுக்களின் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தில் 90-வயது மூதாட்டிக்கு தடுப்பூசி முதன் முதலில் போடப்பட்டது, 4-மாநிலங்களைச் சேர்ந்த 7000 பேருக்கு 2-நாள் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தற்போது தொடங்கியுள்ளது
