
நேற்று மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், எனது ஆதரவாளர்கள் கூறியபடி நான் முடிவு எடுப்பேன். என்று கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான (தி)முக அழகிரி அறிவித்துள்ளார்.

அதன்படி, ஆதரவாளர்களுடன் நேற்று மாலை 5 மணி அளவில் (தி)மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அறிவித்ததாவது, சதிகாரர்கள் மற்றும் துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம். மதுரை நமது (என்) கோட்டை, இதை யாராலும் மாற்ற முடியாது.

திருமங்கலம் இடைத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்றோம், உலகமே திருமங்கலம் இடைத்தேர்தலை உற்று நோக்கியது. திருமங்கலம் பார்முலா என்பது எங்களது கடினமான உழைப்பு. கருணாநிதியிடம் என்னை பற்றி பொய்களை கூறி கட்சியைவிட்டு என்னை நீக்கினர். திமுக-வுக்கு ஒரு சாதாரண தொண்டனாக நான் பணியாற்றினேன். கருணாநிதி மற்றும் அன்பழகனுக்கு தெரியாமல் என்னை திமுக-வில் இருந்து நீக்கினர். எந்த ஒரு பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை, என்று (தி)முக அழகிரி பேசியுள்ளார்.
