உலகளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் விளைவாக பல பேரழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது குரோஷியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பியாவில் உள்ள குரேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 அளவில் நிலநடுக்கமானது பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக குரேஷியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நகரின் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
மேலும், பலர் காயமடைந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி வருகின்றது. ஐரோப்பியாவில் ஜாக்ரேப் நகரில் இருந்து 46 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இதனைப்போன்றதொரு நிலநடுக்கம் செர்பியா மற்றும் போஸ்னியா பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
+1
+1
+1
+1
+1
+1
+1