
மங்களகரமான சார்வரி வருடத்தில் மார்கழி மாதம் 17-ஆம் தேதியன்று திரிதியை திதியுடன் கூடிய பூச நட்சத்திரம் நடந்து கொண்டிருக்கின்ற வேளையில் ஆங்கில புது வருடமானது பிறக்க இருக்கின்றது.

மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத சில தேவைகள் தனம், தொழில், திருமணம், குழந்தை பாக்கியம். இவைதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியை தரக்கூடியவையாகும். ஒவ்வொரு புது வருட பிறப்பின் போதும் ஒவ்வொருவர் மனதிலும் பல கேள்விகள் எழும். அதில் ஒன்று இந்த புது வருடமாவது நமக்கு நன்மையை தராதா? என்ற ஏக்கம்தான் அது..

இன்னும் சில தினங்களில் 2021-ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்த புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும், என்பதை பற்றி நாம் பார்க்கலாம். ஆங்கில புது வருடமான 2021 – இல் நன்மைகளை பெறும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்.

ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மீனம், இந்த ராசிக்காரர்களின் மனதில் இருந்து வந்த கவலைகள் யாவும் நீங்கி இந்தவருடம் சுபிட்சம் உண்டாக போகிறது. சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் இவர்களுக்கு மேம்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

இவர்களின் செயல்பாடுகள் மிகச்சிறப்பை பெறும், சுப முயற்சிகள் கைகூடும், நண்பர்களின் மூலம் இவர்களுக்கு ஆதாயம் உண்டாகும், வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும், பணிபுரியும் இடங்களில் உயர்வான சூழல் உண்டாகும், இந்த ராசிக்காரர்கள், இந்த காலத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டு மனதில் மறைந்துள்ள பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வாழ்வில் பெரும் சுபிட்சம் அடைவீர்களாக.

மேலும், கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அள்ளி அளிப்பார்கள். அதாவது, திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லது நவகிரகங்கள்.