
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பனிபிச்சை வயது 36. இவருக்கும் அவரது ஊரைச் சார்ந்த மேகலா என்ற பெண்ணுக்கும் இடையே சென்ற 2012-ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது.

திருமணத்தில் இணைந்த இவர்கள் இருவருக்கும் 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், சென்ற 17-ஆம் தேதி இரவு நேரத்தில் திடீரென்று நெஞ்சுவலி வந்து மனைவி மேகலா இறந்து விட்டதாக, மனைவி மேகலாவின் குடும்பத்தாருக்கு பனிபிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரின் மீது சந்தேகமடைந்த மேக்லா-வின் உறவினர்கள் விசாரணை செய்கையில், பனிபிச்சை கதறியழுது கபட நாடகம் ஆடியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக அடுத்த நாள் காலையிலேயே மேகலா-வை நல்லடக்கம் செய்துள்ளனர். அப்போது கேரளாவிலிருந்து வந்த மேகலாவின் அண்ணன், பனிபச்சை மீது கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், மேகலா இறந்ததையொட்டி சென்ற வாரம் முட்டத்தில் உள்ள தேவாலயத்தில் நினைவு திருப்பலி நடைபெற்றது. அந்த நேரத்தில், பனிபிச்சை தன் மகனிடம் லெட்டர் ஒன்றை கொடுத்து, அதை தனது மனைவி மேகலாவின் அக்கா மகளான 16-வயதே ஆனா சிறுமியிடம் கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது. அந்த லெட்டரை வாங்கிய சிறுமி அதில் எழுதிருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

அந்த லேட்டரில் எழுதியிருந்த்ததாவது, ” செல்லம், உன்னை நான் காதலிக்கிறேன். உன்னை அடைய சித்தி மேகலாவை அடித்துக்கொலை செய்து, அதற்கு பாவ மன்னிப்பு கேட்கிறேன் என நான்கு பக்கங்கள் “பனிபிச்சை காதல்பிச்சை” எடுத்துள்ளான். மேலும், உனக்காக மட்டும்தான் நான் உயிரோடு இருக்கிறேன். தனது குழந்தைகளுடன் சேர்ந்து, நாம் நான்கு பேராக இனியாவது நன்றாக வாழலாம். இனியும் சிறு பிள்ளை போல நீ இருக்க வேண்டாம். நம்மை கடவுள் ஆசீர்வதிப்பார். பயப்படாமல் என்னை காதல் செய், நீ மட்டுமே எனக்கு வேண்டும்” என்று அந்த லேட்டரில் எழுதி அவளிடம் கொடுக்குமாறு தன் மகனிடம் கொடுத்து அனுப்பியுள்ளான்.

இதையடுத்து, இந்த விவகாரம் அவனால் கொலை செய்ய்பட்ட மனைவி மேகலாவின் சகோதர் அந்தோணியடிமைக்கு தெரியவரவே, அவர் உடனே குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் பனிபிச்சை-யிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தனது மனைவியின் உடன் பிறந்த சகோதரிக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். அவர் இணையதள வகுப்பில் கலந்து கொண்ட நிலையில், இணைய வசதிக்காக தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்.

அப்போது அவரை அடைய வேண்டும் என்ற ஆசை தனக்கு வந்தது. இதனையடுத்து அவ்வப்போது அவளுக்கு பாலியல் சீண்டலும் நான் கொடுத்தேன். அவள் படிப்பு காரணமாக எனது பாலியல் சீண்டல்களை தன் வீட்டார் யாரிடமும் தெரிவிக்காததால், அதனை நான் சாதகமாக பயன்படுத்தி மேலும் அவளுடனான பாலியல் சீண்டலை அதிகரித்தேன். இந்த செயல் ஒரு நாள் தன் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து, எங்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த நான், மனைவியை அடித்து கொலை செய்தேன் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து பனிபிச்சை-யின் மீது கொலை வழக்குப்பதிவு செய்த குளச்சல் காவல்துறையினர், பனிபிச்சையை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், புதைக்கபட்ட மேகலாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமைனைக்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் முட்டம் குதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.