கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28-ஆண்டுகளுக்கு பின்பு பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்றனர். இதற்கு காரணமாக அமைந்தது திருடன் ஒருவர் அளித்த சாட்சி ஆகும்.
கேரளாவிலுள்ள கோட்டயத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில் கன்னியாஸ்திரி அபயா வயது 21, 1992-ஆம் ஆண்டில் பிணமாக கிடந்தார். விசாரணை நடத்திய காவல் அதிகாரிகள் அது தற்கொலை என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பிற்கு பிறகு இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரையின் படி வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது.
பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் உல்லாச உடலுறவு கொண்டு ஒன்றாக இருந்ததை அபயா நேரில் பார்த்துள்ளார். இதை எங்கு வெளில் சொல்லி விடுவாரோ என்று சமயம் பார்த்து அபயா-வின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை கொலை செய்து தாமசும், கன்னியாஸ்திரி செபியும் அபாய-வின் உடலை கிணற்றில் வீசியது சி.பி.ஐ.-யின் விசாரணையில் தெரியவந்தது. இதனை பார்த்த நேரடி சாட்சியான அடக்கா ராஜூ என்ற திருடன் அளித்த சாட்சியம் தான் பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை வழங்க காரணமானது.
1990-களில் சிறிய திருடனாக இருந்தவர் அடைக்கா ராஜூ. இவர் சம்பவம் நடந்த கிறிஸ்தவ பள்ளி வளாகத்தில், சம்பவத்தன்று வியற்காலை 4:00 மணிக்கு தாமிரா கம்பிகள் திருட சென்றுள்ளார். தொடர்ந்து மூன்று நாட்கள் இதே நேரத்தில் திருடச்சென்று கொஞ்சம் கொஞ்சமாக கம்பிகளை கைவசமாக்கிவிட்டார். மூன்றாவது நாள் திருட சென்ற போது தான், இப்போது தண்டனை பெற்றுள்ள பாதிரியாரும், கன்னியாஸ்திரி செபி-யும் சேர்ந்து அபயா-வை துாக்கி கிணற்றில் இடுவதை பார்த்துள்ளார். பின்னர் அதை பார்த்த அவர் பயந்து போய் சத்தமிடாமல் வெளியே வந்து விட்டார்.
மறுநாள் காவல் அதிகாரிகளின் விசாரணை நடக்கும் போது, இவரும் சம்பவ இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். அபயா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ என்ற எண்ணத்தில் வழக்கை விசாரித்தனர் காவல் அதிகாரிகள். அப்போது இவர் பார்த்த காட்சியை சொன்ன போது யாரும் நம்பவில்லை. தான் திருட வந்த போது நேரில் பார்த்தேன் என்று சொன்ன போதும் விசாரித்த காவல் அதிகாரிகள் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக இவரே அபயா-வை கொலை செய்து விட்டார் என்று வழக்கை அவர் மீது சாட்டி அவரை கைது செய்தனர்.
அபயா-வை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்ளுமாறு அவரை சித்திரவதை செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். கத்தோலிக்க திருச்சபையின் அரசியல் நிர்ப்பந்தத்தால் கேரளாவில் மாறி மாறி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் அரசுகள் இதனை தற்கொலை வழக்காகவே கருதி வழக்கை முடித்தது.
பின்னர் நீதிமன்றம் அதில் தலையிட்டு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு பாதிரியார் கைது செய்யப்பட்ட போதும் போதிய சாட்சிகள் இன்றி, வழக்கை சி.பி.ஐ., முடித்தது. பின்னர் மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ.,யில் புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தான் கேட்கப்படாத சாட்சியாக, கவனிக்கப்படாத சாட்சியாக இருந்த தாமிர கம்பி திருடன் ராஜூ-வை விசாரித்து சாட்சியாக்கினர்.
திருடனாக இருந்தவர், பொய் சொல்கிறார் என உள்ளூர் காவல் அதிகாரிகள் கூறியதை புறந்தள்ளி, அரசியல் நிர்ப்பந்ததிற்கு அடிபணியாமல், சி.பி.ஐ., இவரை நேரடி சாட்சியாக்கியது. இதுவே வழக்கிற்கு பெரும் பலம் சேர்த்தது. நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு கன்னியாஸ்திரி-க்கும், பாதிரியாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.
மேலும் அடக்கா ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் அன்றைய நாட்களில் சிறிய அளவில் திருடுவேன். நான் திருடத்தான் அங்கு சென்றிருந்தேன். பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோரை நான் அங்கு பார்த்தேன். ஆனால் இதனை நான் முதலில் வழக்கை விசாரித்த காவல் அதிகரிகளிடம் சொன்ன போது, அவர்கள் நான் தான் கொலை செய்ததாக கூறி என்னை கைது செய்துவிட்டனர். மேலும் நான் தான் அபயாவை கொலை செய்தேன் என்று கூறுமாறு அடித்து என்னை கைது செய்த காவல் அதிகாரிகள் என்னை பலமாக துன்புறுத்தினர். ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னர் 64-நாட்கள் என்னை காவல் அதிகாரிகள் என்னை காவலர்கள் சிறையில் இருக்க வைத்து, எனக்கு ஆசைக்காட்டினர். கன்னியாஸ்திரி அபயா-வை கொன்றதாக ஒத்துக்கொண்டால், எனக்கு வீடு, பணம், மனைவிக்கு நல்ல வேலை தருவோம் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். நான் வறுமையின் காரணமாக ஏழை தான்; அதற்காக அநீதிக்கு ஒருநாளும் துணை போக மாட்டேன். எனக்கும் பெண் குழந்தை இருக்கிறது. மேலும் எனக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அபலைப்பெண்ணான கன்னியாஸ்திரி அபையா-வுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற என் முடிவில் மிக உறுதியாக இருந்தேன். தற்போது பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் தண்டிக்கப்பட்டதால் 28-ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அபயா-வின் ஆத்மா சாந்தியடையும் என்று எண்ணுகிறேன். இவ்வாறு அந்த சந்திப்பில் கூறியுள்ளார் அடக்கா ராஜூ.
மேலும் அவர் திருட்டு தொழிலை அன்றே விட்டு, மனம் மாறி தற்போது கூலி தொழிலாளியாக இருக்கும் ராஜூவின் நேர்மையை பாராட்டி பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். பணத்திற்கு அடிபணியாமல் நீதியை நிலைநாட்ட துணை நின்ற இவருக்கு பெரும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.