
தமிழ் சினிமா-வில் எந்த விதமான பிறர் உதவிகளும் இல்லாமல் நடிகராக அறிமுகமாகி, தற்போது வரை பெரிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிக ரசிகை பட்டாளமே உள்ளது.

தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்று நடிகர் அஜித் தமிழகமெங்கும் உள்ள அனைத்து ரசிக ரசிகைகளிடம் மன்றங்களையும் கலைத்து இருந்தாலும் கூட, இதுவரை அவருக்கு ரசிகர் கூட்டம் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்தது. தற்போது நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்காக செய்த செயல் ஒன்று வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக நடிகர் அஜித் தனது படத்தை நேரம் இருந்தால் மட்டும் வந்து பாருங்கள். மற்றபடி எனக்கு என்று தங்களது வாழ்வில் எந்தவிதமான நேரத்தையும் கொடுக்க வேண்டாம். ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது..

இதுதான் நடிகர் அஜித் மீது தமிழக ரசிகர்களுக்கு பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ரசிகர்களுக்காக தன் மிகவும் நேசித்த கார் பந்தய விளையாட்டை தான் விட்டு விட்டதாக கூறியிருக்கிறார். இந்த காணொளி தற்போது வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அவருக்கு கார் பந்தயம் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒன்றுதான். ஆனால், தனது ரசிகர்களுக்காக தனக்கு விருப்பமான அந்த கார் பந்தையா விளையாட்டை தியாகம் செய்தவர் நடிகர் அஜித் என்பதை கேட்ட அவருடைய ரசிகர்கள் பெரிதும் உருகி போய்விட்டனர்.