
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், திருமானூரில் மக்கள் தலைவர் ஐயா ஜி கே மூப்பனார் அவர்களின் பாராளுமன்ற நிதியில் அரங்க மேடை அமைக்கப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கிராம பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.

மேலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை சமயத்தில் இந்த இடத்தை தான் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், நேற்று 24 -12 -2020 அத்தகைய அரங்க மேடையை மறைந்த கருணாநிதி-யின் பேரன் திமுக-யின் உதயநிதி வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக, அவசர அவசரமாக யூனியன் சேர்மன் நிதியில் வேலைபார்த்து கட்டியது போல் அரங்க மேடையின் பெயரான “ஐயா ஜி கே மூப்பனார் அரங்கம்” என்ற பெயரை அழித்து விட்டார்கள்.

ஆட்சிக்கு வரும் முன்பே இந்த அராஜக செயலில் ஈடுபடும் திமுக-வை கண்டித்து, திமுக-வின் உதயநிதி வாகனத்தை, தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணி மாநில துணைத்தலைவர் மனோஜ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தலைமையில் வழி மறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற அராஜக செயலில் ஈடுபடும் திமுக-வை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா நேற்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில், சமூகவலைத்தளமான டிவிட்டரில் #உதைவாங்கியஉதயநிதி என்று இந்திய நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #உதைவாங்கியஉதயநிதி என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் இட்ட சில பதிவுகள்.