இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் வாயிலாக கிடைத்த தகவல்களை இஸ்ரோ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவின் இஸ்ரோவால் சென்ற ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி வானில் ஏவப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி பூமியின் துணை கோளான நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்த சந்திரயான்-2 விண்கலம், நிலவில் இறங்குவதற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்து லேண்டரானது நிலவின் மேற்பரப்பில் கீழே விழுந்தது.
அவ்வாறு லேண்டரானது விழுந்த போதிலும், செயற்கைகோளின் ஆயுள் ஓராண்டு இருந்ததால், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் அது தொடர்ந்து இயங்கியது. நிலவின் சுற்றுப்பாதையில் அது பல படங்கள் மற்றும் அறிவியல் தரவுகளை இந்திய நாட்டின் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு சந்திரயான்-2 விண்கலமானது தொடர்ந்து அனுப்பியுள்ளது.
அப்போது நிலவின் துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது போன்ற பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. சுமார் 1,056 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பின் 22 சுற்றுப்பாதைக்கான படங்கள் பெறப்பட்டிருப்பது அதில் குறிப்பிடத்தக்கது. சந்திரயான்-2 செயற்கைகோள் அனுப்பிய தகவல்கள் இப்போது இஸ்ரோவின் இணையதளம் உள்ளிட்ட நான்கு இணையதளங்களில் இஸ்ரோவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
https://www.isro.gov.in/chandrayaan2-latest-updates
நிலவின் மேற்பரப்பு படங்களுக்கு – நன்றி இஸ்ரோ!!!