நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான், ஆரம்பம் முதலே நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். அதுபோல, கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவரையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார்.
இந்தநிலையில், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்கினால் தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம் என்று பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு, பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேர் நின்றார்.
பின்பு திரும்பி வரும் பொது, செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் ரஜினி மற்றும் கமலை அடிக்கிற அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வரக்கூடாது என்றார் அப்போது ஒரு நிருபர் நடிகர் விஜய் கூடவா என்று கேட்டார் அதற்கு திரு சீமான் அவர்கள் அனைவருக்கும் சேர்த்துதான் என்று பதிலளித்து’ மிகக் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். சீமானின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விஜயின் ரசிகர்கள் சீமானுக்கு எதிரான ஹேஷ்டேக் ஒன்றை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வந்தனர் ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி தம்பிகள் “#மக்கள்தலைவர்சீமான்” என்ற ஹேஷ்டேகை இட்டு அதற்கு மேலாக இந்திய அளவில் ட்ரண்ட் செய்ய்தார்கள் . மேலும் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்தும் பிளக்ஸ் பேனர்களை அடித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர் ஆனால் அதைப்பார்த்த சீமானின் தம்பிகள் அதில் “விவசாயி” சின்னத்தையும் இட்டு ஒட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் விஜய் ரசிக குஞ்சிக்களிடம்.