தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த நிலையில், பல அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. மேலும், சில அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் திமுக மற்றும் மூன்றாவது அணியாக களம்காணும் பல அரசியல் கட்சிகள், இந்த தேர்தலில் வெற்றிபெற்று எப்படியாவது ஆட்சி பீடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக அரசு நடத்தி வரும் கிராம சபை கூட்டத்தின் பெயரையும் உபயோகம் செய்துள்ளது சில கட்சிகள்.
இந்த நிலையில், “கிராமசபை” என்ற பெயரை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்தி பொதுக்கூட்டம் கூட்டினால் அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். சில அரசியல் கட்சிகள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் அரசியல் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் அரசியல் கூட்டங்கள் நடத்துவது மக்களை பெரும் மனக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் என்று உள்ளாட்சித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு அந்த ஊராட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது என்றும் அதில் தெரிவித்துள்ளது.