
தமிழகத்தின் சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதி அருகே வசித்து வந்தவர் செல்லதுரை. இவருக்கு இரு மனைவிகள் இருக்கின்றனர். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்த இவர், சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வந்ததாக தெரிகிறது.

செல்லதுரை மீது கொலை, ரேஷன் அரிசி கடத்தல் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்நிலையில், அடிதடி வழக்கு ஒன்றில் சில மாதங்களுக்கு முன்னர் செல்லதுரை காவல் அதிகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தி பின்பு சேலம் மத்திய சிறையில் அடைத்தன்ர்.
அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த செல்லதுரை, சென்ற 15 நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், செல்லதுரை தனது வழக்கறிஞரை காண நான்கு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது, அவரை பின் தொடர்ந்த இரு கும்பல், முன்னும் பின்னுமாக அவர்களது வாகனத்தல் செல்லதுரை சென்ற வாகனத்தின் மீது மோதி செல்லத்துரையின் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.


முதற்கட்ட விசாரணையில், செல்லதுரைக்கும், அவரது நண்பர் ஜான் என்பவருக்கும் அரிசி கடத்தலில் தகராறு ஏற்பட்டதாகவும் அதற்கு பழி வாங்க ஜான் ஒரு கும்பலை ஏற்பாடு செய்து செல்லதுரையை தீர்த்து கட்டியதாகவும் தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பல வழக்குகளில் சிக்கியிருந்த தற்போது நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.