
கருவுற்று இருக்கும் பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு ஆட்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் குழந்தை சிசு மோசடி வியாபாரத் தொடர்பு ஒன்றினை காவல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கையில் குழந்தைகள் மற்றும் மகளிர் காவல் அதிகாரிகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு, குழந்தைகள் கடத்தல் வியாபார மோசடியில் ஈடுபட்ட 47 வயதுடைய ஒரு நபரை மாத்தளை, உக்குவெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி ஒருவர் செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இணையதள வழியாக, விளம்பர காணொளி ஒன்றை தயாரித்து, அந்த செயலில், குறித்த அந்த நபர்கள் இந்த மோசடியை மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் நடத்திச் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சில பெண்களை, சந்தேகத்திற்குரிய அந்த நபர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அவர்களை அழைத்து, ஒப்பந்தங்களுக்கு அவர்களை ஆட்படுத்தி குழந்தைகள் பிறந்தவுடன் அந்த குழந்தைகளை மூன்றாவது ஒருவருக்கு விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இந்த குழந்தைகள் கடத்தல் மோசடியை “பேபி பார்ம்” என குறிப்பிடுவதாகவும் இதனுடன் தொடர்புடைய கருவுற்ற 12 -பெண்களை காவல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களுள் 5 பேரின் குழந்தைகள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று குழந்தைகள் தயாராக இருப்பதாகவும் மேலும் 12-கர்ப்பிணி பெண்கள் அந்த சந்தேக நபரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அவர் அறிவித்துள்ளார். இதுவரையில் அவ்வாறு சுமார் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.