
அண்ணாத்த படக்குழுவில் ஆறு-பேருக்கு கொரோனா நோய் உறுதியாகியுள்ளதால், அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிலிம் சிட்டி அருகே இருக்கும் நட்சத்திர விடுதியில் நடிகர் ரஜினி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், படக்குழுவில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அண்ணாத்த படக்குழுவில் ஆறு-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. படக்குழுவில் ஆறு-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரிசோதனைக்கு பின்பு நடிகர் ரஜினி உட்பட படக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்படுகிறது. நடிகர் ரஜினி வரும் 31-ஆம் தேதி அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த இந்த நிலயில், கொரோனா தொற்றால் அண்ணாத்த கேன்சல் என்ற தகவல் வெளியாகிய செய்தி அறிந்து, நடிகர் ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.