
உலகம் முழுவதும் எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் Earthquake வைரஸ் நோய் பரவல் போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. சமீப காலமாக நிலநடுக்கம் போன்ற பிரச்சனைகள் சிறிய அளவில் அதிக நாடுகளில் ஏற்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு இருக்கிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்துகுஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் இந்திய நேரப்படி நேற்று இரவு 10.53 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து 632-கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் இன்னும் ஜப்பான் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.