
சின்னத்திரை நடிகை வி.ஜே. சித்ரா தற்கொலை செய்து கொண்ட Chitra dating issue விவகாரத்தில், விஜய் டிவி ரக்சனுக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு தகவல்கள் எழுந்து வந்த நிலையில் இந்த தகவல்கள் குறித்து ரக்சஷன் தற்போது தன் மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரபல சின்னத்திரை தொடர் நடிகை சித்ரா சென்ற 9-ஆம் தேதி தான் தங்கியிருந்த நசரத்பேட்டை தனியார் விடுதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அனைவருக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சித்ராவின் இந்த தற்கொலை விவகாரத்தில், பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்தது. மேலும், சித்ரா கொலை செய்யப்பட்டார் என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சித்ராவை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக, அவரது ரகசிய கணவர் ஹேமந்த்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமக மிகப்பிரபலமானவர் வி.ஜே ரக்சன், இவர் நடிகை சித்ராவுடன் டேட்டிங் செய்ததாகவும், தற்பொழுது அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து அவர் சித்ராவை மிரட்டியதாகவும், இதனால் தான் சித்ரா மன அழுத்தத்திற்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின.

தற்போது இது குறித்து ரக்சன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நானே மிகவும் குறைவான ஊதியத்தில் பணி செய்து வருகின்றேன். விஜே சித்ராவுடன் நான் டேட்டிங் செய்ததாக பல வதந்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகள் அனைத்தும் தவறானது. நடிகை சித்ரா எனக்கு நல்ல ஒரு தோழி என்று கூறியுள்ளார். மேலும் விஜே ரக்சன் நடிகை சித்ராவுடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.