தழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற Actor Rajini ஸ்டெர்லைட் போராட்டமானது, வன்முறை போராட்டமாக மாற்றப்பட்டது. இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில், சுமார் – 13 பேர் பலியாகினர். மேலும், பலபேர் காயமடைந்தனர்.
வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாறுவதற்கு, சமூக விரோதிகள்தான் காரணம்” என்று அறிவித்தார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வரும் இந்நிலையில், வருகின்ற 2021-ஆம் வருடம் ஜனவரி மாதம் நடிகர் ரஜினிகாந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராகலாம் என்று விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டு, நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் விசாரணை தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி, வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக, ஆணையத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.