இங்கிலாந்து நாட்டில் இல்போர்டு என்னும் பகுதியில் வாழும் அமெரிக்கரான ஜோய் டோனார் வயது 50, கொரோனா தொற்று நேரத்திலும் இங்கிலாந்து பெண்கள் சுமார் 15 பேருக்கு 150 children உயிரணு தானம் செய்துள்ளார். அவர்களில் மூன்று பெண்கள் தாயாக இருக்கும் செய்தி அறிந்து, அதுதான் தனக்குக் கிடைத்த மிகப்பெரும் கிறிஸ்துமஸ் பரிசுகளிலேயே சிறந்த பரிசு என்கிறார் ஜோய்.
ஒரு ஆண்டுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை 150 குழந்தைகள், அவர் மூலம் பிறந்துவிட்டார்கள், என்றாலும் இன்னமும் நிறுத்தமாட்டேன் என்று பெருமை கொள்கிறார். தன்னிடம் உயிரணு தானம் பெற்ற பல பெண்கள் தங்களுக்கு குழந்தை பிறந்ததும் தனக்கு பிறந்த அந்த குழந்தைகளின் புகைப்படத்தை அனுப்புவதுண்டு என்று கூறும், ஜோய், சில பெண்கள் இன்னமும் தன்னுடன் தொடர்பிலிருப்பதாகவும் கூறி வருகிறார்.
ஏதாவது ஒரு நாள் அந்த குழந்தைகள் தங்கள் ஒன்று விட்ட சகோதர சகோதரிகளை தேடும்போது அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார் ஜோய். மேலும் ஜோய் அமெரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளுக்கு சுற்று பயணம் செய்து உயிரணு தானம் செய்துள்ளார். இவர் உலக அளவில் பிரபலமான தாராள பிரபு போல் தன்னுடைய விந்தை தானம் செய்து வருகிறார்.