தமிழ் நாட்டின் தலைநகரான Transgender preacher சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஆயிஷா. இந்த பெண்மணியின் கணவர் மகபூப் பாஷா. இவர் சென்ற ஜூன் மாதம் மனநிலை சரியில்லாமல் இருந்ததால், அங்குள்ள அரசு ஸ்டாண்லி மருத்துவமனைக்கு அருகே இருக்கும் தர்காவில், இரண்டு நாட்கள் போய் பேய் பிடித்ததாக கூறி மந்திரம் ஓதப்பட்டது.
ஆனால், அவரின் மனநிலையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால், ஆயிஷாவின் உறவினர்கள் சிலர் அறிவுறுத்தலின்படி செங்குன்றம் அருகே உள்ள அம்மன் கோயிலில் பேய் ஓட்டுவதை தொழிலாக செய்து வந்த திருநங்கை சங்கர் என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு, ஆயிஷாவின் கணவர் பாஷாவிற்கு பேய் பிடித்துள்ளது என்று கூறி பத்து நாட்கள் தங்க வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று சங்கர் கூறவே, பேயை விரட்டுவதாக கூறி பாஷா-வின் உடல் முழுவதும் பிரம்பால் அடித்து பிரித்து மேய்ந்துள்ளார் சங்கர். இந்த நிலையில், சென்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி மகபூப் பாஷாவிற்கு உடல் நலக் கோளாறு ஏற்படவே, அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த விஷயம் தொடர்பாக அவரது மனைவி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடலின் பல இடங்களில் பலத்த காயங்களால் இரத்தக்கட்டு ஏற்பட்டிருந்ததும், தலையில் உண்டான இரத்தக்கட்டு மூலமாக உடலின் பல விதமான உறுப்புகள் செயலிழந்து மூச்சு திணறி ஆயிஷாவின் கணவர் பாஷா பலியாகியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து திருநங்கை சாமியார் சங்கர் அடித்ததில் அவருக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருநங்கை சாமியார் சங்கரை வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், சுமார் ஆறு மாத கால தேடுதலுக்கு பின்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.