மறைந்த முதலவர் செல்வி ஜே ஜெயலலிதா தமிழகத்தில் upcoming elections மதுவிலக்கு அமலானது படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழகத்தில் முதல்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடி உடனடி நடவடிக்கை எடுத்தார்.
மேலும் அவர் மறைந்த பின்பு தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ள திரு. எடப்பாடி கே பழனிசாமி, அவரது வழியில் மேலும் 500 மதுக்கடைகளை தமிழகத்தில் மூடி நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றது. தமிழகத்தில் தற்போது 5370 மதுக்கடைகள் மது விற்பனைக்காக செயல்பட்டு வருகின்றது. இதில், 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.
தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வர இருக்கும் பட்சத்தில். அதனை கருத்தில் கொண்டு திரு எடப்படி கே பழனிசாமி முத்லவராக உள்ள தமிழக அரசு மேலும் 500 மதுக்கடைகளை மூட முடிவு செய்துள்ளது. இதில் விற்பனை குறைவாக உள்ள மதுக்கடைகள், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக விற்பனையாகும் மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, அதில் 500 கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றது.