
இலங்கேஸ்வரன் இராவணனின் புகழ் உலகம் அழியும்வரை என்றும் நிலைத்திருக்கும். அதற்கு காரணம் அவர் அசுரர் வேந்தன் என்பதால் மட்டுமல்ல அவர் பெற்றிருந்த உயரிய ஞானமும், அறிவாற்றலும்தான். 64-கு ஆயக்கலைகள் அனைத்தையும் கற்றதோடு மட்டுமின்றி தன் ஜோதிட அறிவு மூலம் எதிர்காலத்தை அறியவும்,

நிகழ் மற்றும் எதிர் காலத்தை மாற்றவும் கூடிய ஆற்றல் பெற்றவர் பத்துத்தலை கொண்ட இராவணன். தன் அறிவின் மூலம் ஒருவரின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வழிமுறைகளை தான் இயற்றிய நூலில் குறிப்பிட்டுள்ளார் இராவணன். அந்த வழிமுறைகள் என்ன என்பதை இங்கு நாம் காணலாம் வாருங்கள்.
இராவண சம்ஹிதா: இராவணன் தனது அறிவாற்றல் மூலம் ஜோதிடத்தை பற்றி எழுதிய நூல்தான் இராவண சன்ஹிதா. இந்த நூல் பல ஆச்சரியமான வழிமுறைகளையும், அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடும். இதன் மூலம்தான், இராவணன் தன் இலங்கையை தங்கத்தாலான சொர்க்கபூமியாக மாற்றினார். இந்த வழிமுறைகளை பயன்படுத்திதான் சிவபெருமானின் அருளையும் பெற்றார் இலங்கேசுவரன் இராவணன்.

செல்வத்தை பெறுவதற்கு மந்திரம்: ஒரு நல்ல நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஆலமரம் இருந்தால் அதன் அருகில் அமர்ந்து தியானம் செய்யுங்கள். தியானத்தின் போது ”ஓம் ஹ்ரின் ஸ்ரீன் கிளின் நமஹ துவ, துவ, ஸ்வாஹா” என்ற இந்த மந்திரத்தை கூறுங்கள். இதனை தொடர்ந்து 21 நாட்கள் கடைபிடித்து செய்து வாருங்கள். அந்த தியானத்தின் போது ருத்ராட்சத்தை தங்கள் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.
இடையூறுல்லா பணத்தை பெற மந்திரம்: பணம் சம்பாதிப்பதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்தால், அவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் ஒரு மந்திரத்தை வீட்டில் இருந்து கூறவேண்டும். அந்த மந்திரம் என்னவெனில் ”ஓம் சரஸ்வதி மஹாபாக்கியே, விதயே கமல லோச்சனே“. இந்த மந்திரம் உங்களின் பணவசதி முன்னேற்றத்திற்கு உள்ள அனைத்து இடையூறுகளையும் தவிடுபொடியாக்கி தடையில்லா பணசெல்வம் கிடைக்க வழிவகுக்கும்.

தேக ஆரோக்கியம் பெறுவதற்கு மந்திரம்: தீபாவளி என்பது மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. அந்த நாளில் நீங்கள் கூறும் ஒரு மந்திரம் உங்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் உடல் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. அந்த மந்திரம் எதேனில் “ஓம் ஹ்ரின் ஷ்ரின் கிளின் மஹாலக்ஷ்மி“. இந்த மந்திரத்தை தீபாவளி திருநாளன்று இரவு 108 முறை சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். இந்த மந்திரம் கூறும்போது கையில் ருத்திராட்சம் இருக்க வேண்டியது மிக அவசியம். இந்த மந்திரத்தை தீபாவளி திருநாளிற்கு அடுத்த நாள் விடியற்காலையில் எழுந்தும் உச்சரிக்கலாம்.
பண செல்வத்தை ஈர்க்கும் மந்திரம்: இந்த மந்திரத்தை கூறுவது உங்களின் பண செல்வத்தின் அளவை பெருக்கும். அந்த மந்திரம் யதெனில் ”ஓம் ஓம் ஓம் நமோ ஹ்ரின் ஓம் பகவதி பத்ம பத்மாவி பூர்வாய குரு குரு சுவாஹ தக்ஷிணே உரேரே“. இந்த மந்திரத்தை கூறுவது அனைத்து திசைகளில் இருந்தும் உங்களுக்கு செல்வத்தை வழங்கும் என்று இலங்கேஸ்வரன் இராவணன் கூறுகிறார். இந்த மந்திரத்தை தொடர்ந்து 21 முறை கூற வேண்டும்.

பண செல்வத்தை தக்க வைத்துக்கொள்ள மந்திரம்: நாம் கடினப்பட்டு உழைத்து சேர்த்து வைக்கும் பணம் நமக்கே தெரியாமல் கரைவது எப்பொழுதும் இயல்புதான். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது அந்த பணத்தை சேமிப்பது. அவ்வாறு உங்கள் பணத்தை பாதுகாக்க இந்த மந்திரத்தை தொடர்ந்து 3 மாதம் கூறுங்கள். அந்த மந்திரம் யாதெனில் ”ஓம் ஓம் யாஷ்சே குபேர வார்ஸ்வானே தியானதிபதியே“. இந்த மந்திரம் கூறுவது உங்களுக்கு குபேர கடவுளின் அருளை பெற்றுத்தரும் என்று இராவணன் கூறுகிறார்.
உடனடியாக செல்வத்தை பெற மந்திரம்: இந்த மந்திரம் கூறுவது உங்கள் செல்வத்தை தக்கவைப்பதோடு, உடனடி செல்வத்தையும் வாரி வழங்கும். இந்த மந்திரம் கூறும்போது உங்கள் பக்கத்தில் ஒரு லக்ஷ்மி தேவியின் சிலையை வைக்கவும். 3 மாதங்கள் முடிந்த பிறகு அந்த சிலையை நீங்கள் பணத்தை சேமிக்கும் பெட்டகத்தில் வைத்துவிடுங்கள். இது உங்களுக்கு உடனடியாக அதிக பண செல்வத்தை தரும் என்று “இராவண சம்ஹிதா” ஏடுத்துரைக்கிறது.

பணம் காய்க்கும் மரத்திற்கு மந்திரம்:பணம் காய்க்கும் மரம் என்பது அனைவரும் விளையாட்டாக கூறும் ஒரு பழமொழி ஆகும். ஆனால் உண்மையில் இராவணன் உங்களுக்கு பணம் காய்க்கும் மரத்தை வழங்கக்கூடிய ஆற்றல் பெற்றவர். உங்கள் வீட்டில் ஒரு நாணயத்தை புதைத்து வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறினால் உங்கள் செல்வம் பலமடங்காக உயரும். அந்த மந்திரம் இதோ ”ஓம் நமோ விக்வினாஷாய குரு குரு ஸ்வாஹ” இந்த மந்திரம் உங்கள் பண செல்வத்தை அதிகரிப்பதுடன் உங்கள் வாழக்கையில் உள்ள தீயசக்திகளையும் விரட்டி அடிக்கும்.
பிறரை கவர்வதற்கு தந்திரம்: வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் மற்றவர்களை கவர விரும்பினால், ஆட்டுப்பாலில் சிறிது மஞ்சள் கலந்து அதனை திலகமாக உங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள். இது அனைவரின் கவனத்தையும் உங்களை நோக்கி திருப்புவதுடன் மட்டும் இல்லாது உங்களை, அனைவரும் விரும்ப வைக்கவும் செய்யும். குளிக்கும்போது ஆட்டுப்பால் கலந்து குளிப்பதும், தங்களை அனைவரும் விரும்பும்படி செய்துவிடும். இராவணனின் வசீகரத்திற்கு இதுதான் மிகமுக்கிய காரணமகா அமைந்துள்ளது.

ஆளுமை செலுத்த தந்திரம்:வெள்ளை நிற பூக்களை ஆட்டுப்பாலுடன் கலந்து அதை நன்றாக அரைத்து தங்கள் நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்வது உங்களை சமூகத்தில் மேன்மையானவராக மாற்றும். உங்களின் சொல்லுக்கு உங்களை சுற்றி நிற்கும் அனைவரையும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படவும் வைக்கும். இலங்கேஸ்வரன் இராவணின் மேன்மை வாய்ந்த சொல் மற்றும் செயல் ஆளுமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
2 comments
I want link to read ravana samhita book
செல்வத்தை பேசுவதற்கு இந்த மந்திரத்தை எத்தனை முறை ஒரு நாட்களுக்கு கூற வேண்டும் சொல்லுங்கள்