திருமணம் ஆகப்போவதை சாக்காக வைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால், அது பலாத்காரமாக இருக்காது என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
பலாத்கார வழக்கை ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அவ்வாறு கூறியுள்ளது. சென்ற 2008-ஆம் ஆண்டு தன்னுடன் ஒரு ஆண் உடலுறவு கொண்டதாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய அந்த ஆணுடன் தன் வீட்டை விட்டு அவருடன் வந்ததாகவும் கூறியுள்ளார் ஒரு பெண், அவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறி ஒரு வளக்கையும் தொடர்ந்துள்ளார்.
ஆனால், இதில் பலாத்காரத்திற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை விடுவித்து விட்டது டெல்லி உயர் நீதிமன்றம். மேலும் அப்போது, திருமண வாக்குறுதியை நீண்ட கால உடலுறவுக்கான தூண்டுதலாகக் கருத முடியாது என்றும் அந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சில தருணங்களில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையிலேயே உடலுறவு கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர் அல்லது ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், இதையே நீண்டகால நெருக்கம் கொண்டவர்கள் செய்ய முடியாது என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி “விபு பாக்ரு” குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில், திருமண நிச்சயம் என்பது சம்மதம் கூட இல்லாமல் வலுக்கட்டாயமாக உடலுறவுக்குப் பச்சைக் கொடி காண்பிப்பது போலத்தான் இருக்கிறது. அப்படி திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி உடலுறவுக்காக அழைப்பது ஐ.பி.சி. 375-ஆவது சட்டப் பிரிவின்படி பலாத்காரக் குற்றமாக இருக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறிப்பிட்டுள்ளது. ஆனாலும், நீண்டகால நெருக்கம் தொடர்பான வழக்குகளில், இதை பலாத்காரக் குற்றமாகப் பார்க்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது அதில் குறிபிடத்தக்கது.