தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு மாவு – 200 கிராம்
மண்டை வெல்லம் – 400 கிராம்
நெய் – 100 கிராம்
கடலை எண்ணெய் – 100 கிராம்
முந்திரி – 50 கிராம்
ஜாதிக்காய் தூள் – தேவையான அளவ
ஏலக்காய் தூள் – தேவையான அளவு
செய்வது எப்படி: பனங்கிழங்கு மாவில் அரை லிட்டர் தண்ணீர் கலந்து மாவை கரைத்து வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஆன பிறகு, மண்டை வெல்லத்தை பொடித்து நன்றாக முறுகல் பக்குவம் வருமாறு பாகு காய்த்து வைக்க வேண்டும். அதன் பிறகு கரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு மாவுக்கரைசலை அளவான சூட்டில் கட்டி பிடிக்காதவறு தொடர்ந்து களி போன்ற பதம் வருவரை கிழறி விடவேண்டும். அடுத்து நாம் காய்ச்சி வைத்து இருக்கும் பாகை அதில் கலந்து கிளறி விட்டுகொண்டே இருக்க வேண்டும்.
கிளறி விடும்போது பாத்திரத்தில் அடி பிடிக்காதவறு அதில் கடலை எண்ணெய் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும், அவ்வாறு செய்யும்போது அல்வா பதம் வந்தவுடன் ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் மற்றும் முந்திரி பருப்புடன் நெய்யை சேர்த்து கிளறி விட வேண்டும், பாத்திரத்தில் அடி ஒட்டாதவாறு அல்வா திரண்டு வரும்போது அதை பாத்திரத்தில் கொட்டி ஆறவிட்டால், நாவிற்கு சுவையான பனங்கிழங்கு அல்வா தயார்.