இலங்கயின் மன்னாரில் பத்து லட்சம் ரூபாவில் புனரமைக்கப்பட்ட சாலையை காணவில்லை என்று பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைதீவு ஒருங்கிணப்பு குழு தலைவருமான காதர்மஸ்தானின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் மன்னார் மூர் சாலை திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலையை காணவில்லை என அங்குள்ள அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அச் சாலையானது ரூபாய்10 லட்சம் நிதி ஒதிக்கீட்டில் சென்ற எட்டு மாதமகா அமைக்கப்பட்டு மக்கள் புழங்குவதர்க்காக கையளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் சாலை மற்றும் சாலைக்கு என அமைக்கப்பட்ட சல்லி போன்றவற்றை காணவில்லை என அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காணாமல் போன அந்த சாலையானது ஒழுங்காக அமைக்கப்படவில்லை எனவும் மூன்று மாதத்திற்குள் அது காணாமல் போயுள்ளதாகவும் தற்போது அந்த சாலையில் கொக்குகள் மீன் பிடித்து கொண்டு இருப்பதாகவும் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதில் தலையிட்டு காணாமல் போன அந்த சாலையை சரியாக புனரமைத்து மறுபடியும் நல்ல தரத்துடன் வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.