
தடுப்பூசி பரிசோதனை நடவடிக்கைகளைக் கடந்து, கோரோனா தடுப்பூசி முதல் முறையாக பிரிட்டனில் இன்று மாக்கிரட் கீனன் என்ற 90 வயது மூதாட்டிக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே முதலாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட பெண்மணி என்ற பெருமையைப் பெறுகின்றார் மாக்கிரட் கீனன். பிரிட்டனில் தமிழ் மக்கள் பெருமளவில் வசிக்கும் கொவென்ரி என்ற இடத்தில் வசித்துவரும் இந்த மூதாட்டிக்கு இன்று பிரிட்டன் நேரம் காலை 06.31 மணியளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மார்கிரட், “ஒரு வருட தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தான் தனது குடும்பத்தை சந்திக்க போவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்தை தனது குடும்பத்தினருடன் மகிழச்சியாகக் கொண்டாடுவதற்கு கிடைத்த தருணத்தை நினைத்து தான் மகிழச்சியடைவதாகவும்” தெரிவித்துள்ளார். 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலிலும், முதியோர் இல்லங்களில் தங்கியிருப்வர்களுக்கு அடுத்ததாகவும், மருத்துவ மனையில் பணியாற்றுவேருக்கு அதற்கு அடுத்த கட்டமாகவும் கொரோன தடுப்பூசி செலுத்துவதற்கு பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே முதன் முதலாக பிரிட்டனில் கொரோனா தடுப்பு ஊசி அதிகாரப்பூர்வமாக செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலிலும், முதியோர் இல்லங்களில் தங்கியிருப்வர்களுக்கு அடுத்ததாகவும், மருத்துவ மனையில் பணியாற்றுவேருக்கு அதற்கு அடுத்ததாகவும் இந்த கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலாக பிரிட்டனில் கொரோனா தடுப்பு ஊசி அதிகாரபூர்வமாக செலுத்தப்படுவது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.