தேவையான பொருட்கள்: பனங்கிழங்கு மாவு – 250 கிராம்
மண்டை வெல்லம் – 300 கிராம்
ஏலக்காய் தூள் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்வது எப்படி: எடுத்து வைத்த மண்டை வெல்லத்தை நல்ல அடிகனமான சட்டியில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் நன்றாக கரையும் வரை கிளறிவிட வேண்டும், வெல்லம் கரைந்ததும் அதை எடுத்து வடிகட்டி, மீண்டும் வடிகட்டிய மண்டை வெல்லத்தை அடுப்பில் வைத்து பகு பதம் வரும்வரை நன்றாக காய்க்க வேண்டும்,.
நன்றாக பாகு பதம் வந்தவுடன் அதில் பொடித்து வைத்த ஏலக்காய் தூள் மற்றும் பணகிழங்கு மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கிளறிவிட வேண்டும். மாவும், வெல்ல பாகும் நன்றாக சேர்ந்து மைசூர்பாகு பதம் வந்தவுடன், ஒரு பாத்திரத்தட்டில் நன்றாக நெய்தடவி அதில் நாம் அதை ஊற்றி சமப்படுத்தி சிறிது நேரம் ஆரா விட வேண்டும். பின்பு நாம் விரும்பும் வடிவத்தில் அதை சிறு சிறு துண்டுகளாக பிரித்து எடுக்க வேண்டும். இப்போது சாப்பிடுவாதற்கு உகந்த சுவையான மிருதுவான பனங்கிழங்கு கடலை மிட்டாய் தயார்.