
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளனர். அது மட்டுமின்றி தங்களுக்கு பிடித்தமான கதாநாயகர்களின் பட வெளியீடு தேதியை ஒரு திருவிழாவைப் போலவே கொண்டாடி வருகின்றனர் அவரவர் ரசிகர்கள்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முதல் பத்து கதாநாயகர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் ஒரு சினிமா படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்பது பற்றியும் ஒரு பட்டியல் வெளியாகி, அது பெரும் வைரலாகி வருகிறது இணயதளங்களில் தற்போது.
தமிழ் சினிமாவில் முதல் பத்து கதாநாயகர்கள் மற்றும் அவர்களின் சம்பள பட்டியல் இதோ உங்களுக்காக

நடிகர் திரு.ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் எப்போதும் தனித்துவமாக முதலில் இருப்பது நடிகர் ரஜினிகாந்த் ஆவார். இவருக்கு தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு மட்டும் இந்திய மதிப்பில் ரூபாய் 100 கோடி சம்பளமாக பெறுகிறார்.

நடிகர் ரஜினியை அடுத்து நடிகர் திரு.விஜய், தமிழ் சினிமாவில் தன் அப்பா எஸ்.ஏ.சி-யின் பின்புலத்துடன் அறிமுகமானாலும், தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி பெரும் உச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தென்னிந்திய திரையுலகையே திகைக்க வைப்பது நாம் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் இவர் ஒரு சினிமா படத்திற்கு இந்திய் மதிப்பில் ரூபாய் 60 முதல் 80 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்று சினிமா வட்டாரங்களால் கூறப்படுகிறது.

அவ்ரை அடுத்து நடிகர் திரு.அஜித், தமிழ் சினிமாவின் மூன்றாவது இடத்தில் நடிகர் அஜித் இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது ரசிகர்கள் வெறித்தனமாய் காத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் அவர் வெற்றி தோல்வி ஆகியவற்றை சரிசமமாக கண்டு, தற்போது பெரும் இமாலய வெற்றி பெற்றிருக்கும் நடிகர் அஜித், ஒரு படத்திற்கு ரூபாய் 55 கோடி சம்பளம் பெறுவதாக சினிமா துறையினர் சொல்கின்றனர்.

நடிகர் திரு. கமல் ஹாசன், நடிகர் கமலஹாசன் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்ததோடு, ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 40 கோடி சம்பளமாக பெறுகிறார் என்று சினிமா நிபுணர்களால் சொல்லப்படுகிறது.

நடிகர் திரு.சூர்யா, சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று சினிமா திரைப்படம் அந்த கதையின் மூலமாக மாபெரும் வெற்றியை கண்டதோடு, நடிகர் சூர்யாவின் ரசிகர்களையும் பெரும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு தற்போது ரூபாய் 25 முதல் 30 கோடி வரை சம்பளமாக பெறுவதால் இந்தப் சம்பள போட்டி பட்டியலில் அவர் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறார்.

நாடிகர் சூர்யாவை அடுத்து நடிகர் திரு.விக்ரம், தமிழ் சினிமாவில் முதன்மை நடிகர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை தக்க வைத்திருக்கிறார் நடிகர் விக்ரம், அவர் அவ்ரது 54-வது வயதிலும் சீறும் சிங்கம் போல் நல்ல உடற்கட்டோடு, அனைவரையும் மிரள வைத்து கொண்டு இருக்கிறார். மேலும் இவர் ஒரு சினிமா படத்திற்கு ரூபாய் 25 கோடியை தனது சம்பளமாக பெறுவதாக தகவல்கள் சினிமா துறைவாசிகளால் சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினியின் மருமகன், மேலும் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனுமான நடிகர் திரு. தனுஷ், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அதற்கேற்றார்போல் தன் உடல் பாவனைகளை மாற்றி அவரது முழுத்திறமையை வெளிப்படுத்தி தன் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் என அனைத்து சினிமா துறைகளிலும் உச்சத்தை அடைந்துவிட்டாலும் இன்றளவும் மிக தாழ்மையோடு இருந்து வருகிறார். மேலும் இவர் சம்பளமக ஒரு படத்திற்கு 22 கோடியை பெறுவதால் இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷ் 7-வது இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறார்.

நடிகர் தனுஷை அடுத்து நடிகர் திரு.சிவகார்த்திகேயன், ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயனாக திகழ்ந்து வருகிறார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அவரது கடின உழைப்பு மட்டும்தான். இவருடைய ஒரு படத்தின் சம்பளம் சுமார் ரூபாய் 20 கோடி முதல் 30 கோடி வரை என்று சினிமா துறையினரால் சொல்லப்படுகிறது. இதனால் இவர் இந்தப் சம்பள பட்டியலில் 8-வது இடத்தை எட்டியுள்ளார்.

இவரை அடுத்து நடிகர் திரு.விஜய்சேதுபதி, தமிழ் சினிமாவில் “மக்கள் செல்வன்” என்ற நன்மதிப்போடு நன்றாக சுற்றிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி, தன் ஒரு சினிமா படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 8 கோடி முதல் 10 கோடி வரை என்று சினிமா வட்டாரங்களால் கூறப்படுகிறது இதன் மூலம் இவர் இந்த பண போட்டியில் 9-வது இடத்தில் உள்ளார்.

நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் திரு.கார்த்தி, நடிகர் கார்த்தி தற்போது சூரரைபோற்று பெண் இயக்குனர் சுதா கொங்காரவின் இயக்கத்தில், ஒரு சினிமா படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் நடிகர் கார்த்தி தான் நடிக்க போகும் ஒரு சினிமா படத்திற்கு, ரூபாய் 6 முதல் 9 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சினிமா தகவல்கள் கூறுகின்றது இதன் மூலம் இந்த சம்பள போட்டி பட்டியலில் இவர் 10-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வந்து கொண்டிருக்கிறது.
மேலும் குறிப்பு: அறிவியல்புரம் இந்த தகவல்களை பல இணயதளங்களை ஒப்பிட்டு அதிலிருந்து சேகரித்து மட்டுமே இந்த தகவல்களை பதிவிடுகிறது இதற்கு அறிவியல்புரம் வலைத்தளம் பொறுப்பல்ல யாரேனும் மேற்குறிபிட்ட சம்பள பட்டியலை சரிபார்க்க விரும்பினால் தமிழ்நாடு வருவாய் துறையை அணுகவும் அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தாங்கள் அந்த அந்த அரசுத்துறைக்கு மனு கொடுத்து பெற்று கொள்ளவும் நன்றி.