
மிக்கி மவுஸின் கதை, அதன் கதை மட்டும் இல்லை மொத்த டிஸ்னி நிறுவனத்தின் கதை. இன்றும் டிஸ்னியை “மிக்கி மவுஸ் கம்பெனி” என்றுதான் பலரும் அழைக்கின்றனர் அந்த அளவுக்கு அந்த எலியின் வடிவம் மற்றும் அதன் பெயார் மக்களின் மனதில் ஆழ்ந்து பதிந்து கிடக்கிறது.
டிஸ்னி என்பது இன்றுதான் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம், ஆனால் 100 வருடங்களுக்கு முன்னர் அது வெறும் ஒரு பெயர் மட்டும்தான். அந்தப் பெயரை வைத்து ஒரு பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தையே கட்டி எழுப்பியவர் வால்ட் டிஸ்னி. இதற்குக் காரணம், ஒரு எலி என்றால் நம்மால் நம்பமுடிகிறதா? ஆனால் அது பெரும் வியப்பாகத்தான் உள்ளது

இதுதான் உண்மை, டிஸ்னியின் வெற்றிக் கதையின் முதல் கட்சி சரியாக இந்த நாளில், அதாவது 1928-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதிதான் அரங்கேறியது எனச் சொல்லலாம். இந்தத் தேதியில்தான் புகழ்பெற்ற கேலிசித்திர (கார்ட்டூன்) கதாபாத்திரமான மிக்கி மவுஸை ஓவியமாக வரைந்தார் வால்ட் டிஸ்னி.
இதை பற்றி டிஸ்னி சொல்லும்போது, எல்லாமே ஒரு எலியிலிருந்து தொடங்கியது என்பதை என்றும் நாங்கள் மறவாமல் இருப்போம் என நம்புகிறோம் என டிஸ்னி நிறுவனத்தின் வெற்றி குறித்து 1954-ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி குறிப்பிட்டுள்ளார். அப்படியான மிக்கி மவுஸ் வரலாற்றைத்தான் இந்த தொகுப்பில் நாம் காணப்போகிறோம்.

செய்தித்தாள்களில் வரும் படங்களைப் பிரதியெடுத்து வரைவது, விலங்குகளுக்கு உடை அணிவித்து கதாபாத்திரங்களாக வரைவது, வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பது எனச் சிறு வயதிலிருந்தே ஓவியகலை ஆர்வம் கொண்டவராகவே வளர்ந்தார் வால்ட் டிஸ்னி. தனது பள்ளிப்பருவத்தில் சொந்தச் செய்தித்தாளின் (கார்ட்டூனிஸ்ட்டாக) கேலிசித்திர ஓவியராக இருந்தார். ஆனால், படிப்பில் அதே அளவுக்குத் அவர் தேர்ச்சி இல்லை. வரைவதற்கே டிஸ்னிக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால், அவரின் (கார்ட்டூன்களுக்கு) கேலிசித்திர ஓவியங்களுக்கு சரியான அங்கீகாரம் மக்களிடம் கிடைக்கவில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள் என அனைத்து செய்திதாள் நிறுவனங்களும் அவரின் ஓவியங்களை நிராகரித்தனர்.
ஆனால் அப்படி இருந்தபோது அவர் தன் கைவிரல்களில் உள்ள பென்சிலைக் கைவிடவில்லை. இப்படியாக வரைதலும் வரைதல் நிமித்தமுமாக இருந்த டிஸ்னியின் வாழ்க்கை திக்கு தெரியாமல் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு ராணுவத்தில் சேர்ந்தார், அப்படியும் ரெட் கிராஸ் (ஆம்புலன்ஸ்களில்) விரைவு சகிச்சை வாகனங்களில் (கார்ட்டூன்) சித்திரம் வரைவது, ராணுவ இதழ்களுக்கு வரைவது எனத் துப்பாக்கியைவிட தன் கை விரல்களில் இருந்த பென்சிலுக்கே அதிக முக்கியத்துவம் தந்தார், தன் சக வீரர்களைத் தனது கைவண்ணம் மூலம் வரைந்து அவர்களை அங்கு சந்தோஷப்படுத்திக்கொண்டே இருந்தார்.

அங்கிருந்து ஓவியங்கள் வரைவதுதான் தனது பிறப்பின் அர்த்தம் எனத் தீர்க்கமாக முடிவெடுத்து படிப்படியாக அதில் முன்னேறினார். ஆனால் அதில் பல தோல்விகளைச் சந்தித்தார். மேலும் பல நிறுவனங்களில் (ஆர்ட்டிஸ்ட்டாக) ஓவியராக பணி செய்தார். அப்போது “அனிமேஷன்” இயங்கு ஓவியம் (இயங்கு படம்) என்னும் மேஜிக்(மாயாஜாலம்) பற்றி வால்ட் டிஸ்னிக்குத் தெரிய வந்தது. உடனே அவர் அதைக் கற்றுக்கொண்டார். அதன் பின்பு ஹாலிவுட் (ஓவியா அறை) ஸ்டூடியோக்களின் கதவுகளைத் தட்டினார், ஆனால் யாரும் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. பின்பு பல போராட்டங்களுக்கு பிறகு “வால்ட் டிஸ்னி” என்னும் சிறிய (அனிமேஷன்) இயங்கு பட நிறுவனம் தொடங்குவது வரை வளர்ந்தார் வால்ட் டிஸ்னி.
அதில் பல பிற விளம்பர நிறுவனங்களுக்காகவும் ஸ்டூடியோக்களுக்காகவும் (அனிமேஷன்) இயங்கு பட வேலைகள் முதலில் செய்துகொடுத்தது அவரின் அந்த நிறுவனம். 1920-ஆம் ஆண்டுகளில் (அனிமேஷன்) இயங்கு படம் பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுவிடவில்லை, 2D செல் அனிமேஷன் முறைதான் உச்சத்தில் செல்ல தொடங்கியிருந்த காலம் அது. அதாவது ஒவ்வொரு ஃப்ரேம்மாக வரைந்து அதை ஓடவிட்டு காட்சியாக்கவேண்டும். அப்படியும் டிஸ்னிக்குப் பல நிறுவனங்கள் போட்டியாகச் சந்தையில் இருந்தன.

அப்போதுதான் “(Oswald the Lucky Rabbit)ஒஸ்வல்டு தி லக்கி ராபிட்” என்ற கதாபாத்திரத்தை வைத்து (கார்ட்டூன்) கேலிசித்திர குறும்படங்கள் எடுத்தார் டிஸ்னி. அதைப் பிரபல யுனிவர்சல் ஸ்டூடியோஸ் திரையரங்குக்கு எடுத்துச்செல்ல பெரும் சாதனை படைத்தது ஓஸ்வால்ட். ஆனால், காப்புரிமை பிரச்சனையில் அந்தக் கதாபாத்திரம் யுனிவர்சல் ஸ்டூடியோவின் கைகளுக்குச் சென்றது. இதனால், சோர்வடைந்த வால்ட் டிஸ்னி, இனி உரிமம் நம்மிடம் இருக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு மட்டுமே வேலை செய்யவேண்டும் என்று தீர்மானமகா முடிவெடுத்தார். ஓஸ்வால்டுக்கு மாற்றாக ஒரு கதாபாத்திரம் வேண்டும் என 1928-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி வரைந்த கதாபாத்திரம்தான், மார்டிமர் மவுஸ் (Mortimer Mouse). அவர் வைத்திருந்த தனது ஸ்டூடியோவில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த ஒரு எலியை மையமாக வைத்து டிஸ்னி வரைந்த கதாபாத்திரம் தான் அது. தன் மனைவியின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த மார்டிமர் மவுஸ், மிக்கி மவுஸ் ஆனது.
பின்பு 1928-ஆம் ஆண்டு மே மாதம் வெளியான “பிளைன் கிரேசி(Plane Crazy)” என்ற முடிவுறாத (அனிமேஷன்) இயங்கு குறும்படத்தின் சோதனைத் திரையிடலில் முதல்முதலாக மிக்கி மவுஸை மக்கள் பார்த்தனர். அதன்பின் சில மாதங்களில் தனது முதல் அதிகாரபூர்வ அறிமுகத்தை ஸ்டீம் போட் வில்லி என்ற இயங்கு குறும்படம் மூலம் பெற்றது மிக்கி மவுஸ். அதில் கப்பல் ஓட்டிக்கொண்டே மிக்கி மவுஸ் விசிலடிக்கும் காட்சி சென்ற நூற்றாண்டுத் திரை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த மிக முக்கியமான காட்சியாகும்.

அந்த இயங்கு குறும்படத்தில் மிக்கி மவுஸ் சிரிப்பது போன்ற சத்தங்களுக்கு, வால்ட் டிஸ்னியே பின்னணியில் இருந்து குரல் கொடுத்திருந்தார். அதன்பின் பல வருடங்களுக்கு மிக்கிமவுஸ் இயங்கு படம், வால்ட் டிஸ்னி-யின் குரலுடன்தான் வெளிவந்தது. 1929-ஆம் ஆண்டில் வெளிவந்த “தி கார்னிவல் கிட்(The Carnival Kid)” என்ற அந்த இயங்கு குறும்படத்தில் “ஹாட் டாக்ஸ், ஹாட் டாக்ஸ்” எனத் தனது முதல் வார்த்தைகளைப் பேசியது மிக்கி மவுஸ்.
வால்ட் டிஸ்னி-யின் மிக்கி மவுஸ் (கார்ட்டூன்களின்) சித்திரங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம், அப்போது புதிதாக வளர்ந்துகொண்டிருந்த ஒரு தொழில்நுட்பம். அது (ஆடியோ) ஒலி இல்லாத வெறும் மௌனப் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் (அனிமேஷன்) இயங்கு பட காட்சிகளுக்கு சிங்க் சவுண்ட் செய்தார் “வால்ட் டிஸ்னி”. அதனால்தான் மிக்கி மவுஸ் விசிலடித்ததும் பிரமித்தனர் பார்வையாளர்கள். அதுமட்டும் இல்லாமல் மற்ற அனைத்துச் சத்தங்களையும் ஒரே நேரத்தில் ஒவ்வொரு கலைஞரையும் வைத்து சரியாக ஒலிப்பதிவு செய்து சாதித்தும் காட்டினார் வால்ட் டிஸ்னி. ஒலியை இன்னுமொரு கதாபாத்திரமாகப் அவ்ர் பாவித்தார்.

மேலும் இது மற்ற கார்ட்டூன்களிலிருந்து மிக்கி கார்ட்டூன்களை வேறுபடுத்தி சிறப்பாக்கியது. இதனால் மிக்கியின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. டிஸ்னி அவ்ரது, போட்டி நிறுவனங்களைப் பின்னால் தள்ளி முன்னேறிக்கொண்டே சென்றது. மிக்கி இயங்கு குறும்படங்கள் தொடர்ந்து ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது. அதுமட்டுமல்ல, மிக்கியின் உருவாக்கத்திற்காகவும், (அனிமேஷன்) இயங்கு பட உலகில் செய்த பிற புரட்சிகளுக்காகவும் கௌரவ ஆஸ்கர் விருது வால்ட் டிஸ்னிக்குக் வழங்கப்பட்டது.
அப்போது இயங்கு குறும்படங்கள், ஒலிகாணொளிகள் எனத் தொடர்ந்து தோன்றிவந்த மிக்கி கிட்டத்தட்ட ஒரு சினிமா நட்சத்திரமாகவே அந்த காலத்தில் மாறியது. இதன் விளைவாக 1978-ஆம் ஆண்டு “ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் (Hollywood Walk of Fame)”-இல் இடம்பெற்ற முதல் கார்ட்டூன் கதாபாத்திரமானது மிக்கி மவுஸ். மேலும் வால்ட் டிஸ்னி மறைந்த பின்பூம் முழு நீளப் படங்கள், விளையாட்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டிஸ்னிலேண்ட்டில் இருக்கும் பொம்மைகள் என இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறது மிக்கி. அது மட்டுமல்ல மொத்த டிஸ்னி நிறுவனத்தின் கதையும் மிக்கி தான், இன்றும் டிஸ்னியை “மிக்கி மவுஸ் கம்பெனி” என்றுதான் மக்கள் பலரும் அழைக்கின்றனர்.

வால்டுக்கு மிக்கி கொடுத்த மைலேஜில் வால்ட் டிஸ்னி தனது பல கனவுகளை நனவாக்கினார். முழு நீள (அனிமேஷன்) இயங்கு படம் எடுக்கவேண்டும் என்பதுதான் வால்ட் டிஸ்னியின் பல நாள் கனவாக இருந்தது. அது 1937-ஆம் ஆண்டில் “ஸ்னோ ஒயிட் அன்ட் தி செவன் டவ்ர்ஸ் (Snow White and the Seven Dwarfs)” என்ற இயங்கு படத்தின் மூலம் சாத்தியமானது. பொம்மை படத்தில் இத்தனை நேர்த்தியா? என்று மக்களை பிரமிக்கவைத்தது அந்தப் படம். அடுத்த படங்கள் வெளியாகியபோது உலகப்போரால் மீண்டும் சறுக்கத்தொடங்கியது டிஸ்னி. அப்போதும் டிஸ்னியைக் கீழே விழுந்துவிடாமல் காப்பாற்றியது அந்த மிக்கி மவுஸ்தான். அப்படி, சின்னச் சின்னத் தடைகள் பல வந்தாலும் தொடர்ந்து (அனிமேஷன்) இயங்கு பட உலகை ஆட்டிப்படைத்தது டிஸ்னி நிறுவனம். மேலும் மிக்கியும் உருவ அளவில் மெருகேறிக்கொண்டே இருந்தது.
வால்ட் டிஸ்னியின் மற்றொரு கனவாக இருந்தது டிஸ்னிலேண்ட் தீம் பார்க்குகள். அதுவும் மிக்கி புண்ணியத்தில் நனவானது. அனிமேஷன் தாண்டிய திரை முயற்சிகளையும் எடுக்கத்தொடங்கியது டிஸ்னி. அதன்பின் டிஸ்னியின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி என்பதே இல்லாமல் போனது இன்று கிட்டத்தட்ட பாதி ஹாலிவுட்டையே குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கிறது டிஸ்னி. மார்வெல் ஸ்டூடியோஸ், ஸ்டார்வார்ஸ், ஃபாக்ஸ் என முக்கிய ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் மற்றும் தயாரிப்புகள் இப்போது டிஸ்னி கைவசம். ஏன், நம்மூர் ஸ்டார் நெட்வொர்க் கூட டிஸ்னிக்குதான் சொந்தம்.

அதாவது நம்ம ஊர் லொள்ளு சபா வரைக்கும் டிஸ்னியின் கைகளில்தான் இருந்து வருகிறது. இப்படி அவெஞ்சர்ஸ் டு சூப்பர்சிங்கர் வரை தன் கையில் வைத்துக்கொண்டு பொழுதுபோக்கு உலகையே ஆண்டுகொண்டிருக்கும் டிஸ்னியின் ஆட்டம் சரியாக இந்த நாளில் அதாவது 1928-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி, மிக்கி மவுஸ் வரையப்பட்ட நாளில்தான் தொடங்கியது. ஒரு சிறிய யோசனை இந்த உலகையே மாற்றலாம் எனச் சொல்வார்கள், அப்படியான ஒரு யோசனைதான் மிக்கி மவுஸ் ஓவியம் வரைந்த கதை.