நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். பொறுத்தது போதும் என்று, வருகிற பொங்கலுக்கு ஐந்து நாள் விடுமுறையில் மிகுந்த எதிர்பார்போடு வெளியாக உள்ளது நடிகர் விஜய்-யின்மாஸ்டர் திரைப்படம்.
ஏற்கனவே திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டமாக பெரிய அளவில் வராததால் மாஸ்டர் படத்தை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை திரையரங்குகளுக்கு எப்படியாவது வர வைத்து விட வேண்டும் என ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்களும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கிட்டத்தட்ட சுமார்1000-க்கு மேற்பட்ட திரையரங்குகளுக்கு மேல் நடிகர் விஜய்-யின் மாஸ்டர் திரைப்படம் ஒரேயடியாக வெளியாக உள்ள தகவல் நடிகர் விஜய் ரசிகர்களை ஏகபோகமாக கொண்டாட வைத்துள்ளது. கண்டிப்பாக மாஸ்டர் படம் பெரிய அளவில் பண வசூல் செய்யும் என எதிர்பார்க்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய்-யின் தளபதி 65 படத்தில் விரைவில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்திற்காக முதலில் எப்போதும் கதை திருட்டு சர்ச்சையில் மாட்டும் இயக்குனர் முருகதாஸ் பேசப்பட்டு பின்னர் அவர் ஒதுக்கித் தள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் யோகி பாபு நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப்குமார் நடிகர் விஜையுடன் இணைந்ததாக சில தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இதனிடையில் நடிகர் விஜய் சமீபத்தில் இளம் இயக்குனர் அட்லீ அலுவலகத்தில் அவரை சந்தித்ததாக ஒரு வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது. ஒருவேளை தளபதி 65 படத்தை மீண்டும் இயக்குனர் அட்லீ இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறதா என ரசிகர்கள் பேர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
என்னதான் விஜய்க்கு அட்லீ தெறி, மெர்சல், பிகில் போன்ற வசூல் சாதனைகள் படைத்த படங்களை கொடுத்தாலும் சமீபத்தில் வெளியான பிகில் படம் ஒரு கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்கள் கால இடைவெளி விட்டு மீண்டும் இணைந்தால்தான் சுவாரசியம் இருக்கும் என்கிறார்கள் நடிகர் விஜய்-யின் ரசிக பட்டாளங்கள்.