சமீபத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை நடைபெற்று முடிந்த பின்பு சென்னை போயாஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்பொழுது அவர் கூறும்போது, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவர்களுடைய கருத்தை கூறினார்கள்.நான் என்னுடைய கருத்தை கூறினேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என அறிவித்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், நடிகர் ரஜினி வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!! என அறிவித்துள்ளார்.