ஓலா, ஊபர் போன்ற கைபேசி அப்புகள் (APPS) மூலம் வாடகை கார்களை ஒருங்கிணைக்கும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
இனிமேல் உச்சபட்ச கட்டணத்தின் அளவு, சராசரி கட்டணத்தின் அளவை விட ஒன்றரை மடங்குக்கு மேல் இருக்க தடை செய்யப்பட்டுள்ளது. 12 மணி நேரங்களுக்கு மேல் ஒரு ஓட்டுனர் ஓலா அல்லது ஊபர் செயலி மூலம் வாகனங்களை ஓட்டத் தடை விதிக்கப்படுகிறது. 12 மணி நேரப் பணிக்கு பிறகு 10 மணி நேரம் ஓய்வெடுத்த பின்னர் தான் ஒரு ஓட்டுனர் இந்த செயலிகளுக்குள் மீண்டும் நுழைவு செய்து இனிமேல் பணியை தொடர முடியும்.
வாடகை கட்டணத்தில் 80% சதவீதத்தை ஓட்டுனருக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் இனிமேல் அளிக்க வேண்டும். ஒரு பயணத்தை ஓட்டுனர் தன்னிச்சையாக ரத்து செய்தால், இனி ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்களுக்கான நெறிமுறைகள் 2020-இல், இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.