மிகவும் ஏழையான மீன்பிடி தொழில் செய்யும் ஒருவர் கடலில் கிடந்த ஒரு பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய அதிசய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்தவர் நரிஸ் வயது அறுபது. மீனபிடி தொழில் செய்யும் இவருக்கு சுமார் 100 கிலோ எடையளவுள்ள திமிங்கலம் எடுத்த வாந்தி ஒன்று கிடைத்துள்ளது. “அம்பெர்கிரிஸ்” என்று சொல்லப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மிகவும் வறுமையில் உள்ள நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது வழியில் ஒரு பகுதியில் பாறை போன்ற வெளிர் நிற கட்டிகள் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் தனது உறவினர் ஒருவர் உதவியுடன் அந்த கட்டிகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அது என்ன என்று தெரியாத நரிஸ் சிலரிடம் அதை பற்றி விசாரித்தபோது, கிடைத்திருப்பது மிதக்கும் தங்கங்கள் என்பதை அவர் அறிந்துள்ளார்.
சுமார் 100 கிலோ எடையளவுள்ள அந்த “அம்பேர்கிரிஸ்” கட்டிகளை தொழிலதிபர் ஒருவர் அதற்கு ஏற்றார்போல கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் என்று விலைபேசி கொடுப்பதாக நரிஸிடம் கேட்டுள்ளார். மாதம் 500 பவுண்டுகள் கூட கிடைக்காத மிகவும் ஏழையான நரிஸீற்கு தற்போது சுமார் 2.6 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப்போகிறது. அதனுடைய மதிப்பு அதிகம் என்பதால், எவரேனும் திருட வாய்ப்புள்ளது என்று மின் பிடி தொழில் செய்யும் நரிஸ், அருகில் அமைந்துள்ள காவல்துறையினரை உதவிக்கு நாடியுள்ளார்.