
தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் வங்க கடலில் உருவான நிவர் புயல் சில நாட்களுக்கு முன்னர் புதுவை மாநிலம் அருகே கரையைக் கடந்தது. அதனால் பெரும்பாலான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
புயலாக வலுவடைகிறது அதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தற்போது காரைக்காலுக்கு கிழக்கு தென் கிழக்கே 970 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. வரும் புதன் கிழமை மாலை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனால் நாகை, கடலூர், காரைக்கால், எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வணிலை ஆய்வுமையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.