
இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் என்ற அமைப்பு சார்பில் காரைக்கால் வீரர் ராஜசேகரன் என்பவருக்கு ஆணழகன் பட்டம் வழங்கப்பட்டது.
இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் சார்பில், 5-வது மிஸ்டர் மஸில்மேனியா, மாநில ஆணழகன் போட்டி, கோவை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்றது. 55 கிலோ முதல் 80 கிலோ எடைப்பிரிவு வரை நடைபெற்ற இந்த போட்டியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் 55 கிலோ எடைப்பிரிவில் ராணிப்பேட்டையை சேர்ந்த வீரர் ஜெ.வினோத்ராஜ் முதலிடமும், திருச்சியை சார்ந்த வீரர் ஏ.பிரபாகரன் இரண்டாமிடமும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஏ.மரியான் மூன்றாமிடமும் பெற்றனர்.
மேலும் 60 கிலோ எடைப்பிரிவில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரர் பி.பாலமுருகன் முதலிடத்தையும், தருமபுரியை சேர்ந்த வீரர் கே.சந்தோஷ் இரண்டாமிடத்தையும், மீண்டும் ராணிப்பேட்டையை சார்ந்த மற்றும் ஒரு வீரர் டி.கோகுல் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

65 கிலோ எடைப்பிரிவில் சென்னையை சார்ந்த வீரர் எஸ்.செந்தூர்ராஜ் முதலிடத்தையும், மதுரை மாவட்ட வீரர் எம்.மாரீஸ்வரன் இரண்டாமிடத்தையும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஏ.ஸ்டாலின் மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர்.
70 கிலோ எடைப்பிரிவில் சேலத்தை சேர்ந்த வீரர் என்.கிருஷ்ணன் முதலிடத்தையும், சென்னையைச்சேர்ந்த மற்றொரு வீரர் எம்.ஜீவன்ராஜ் இரண்டாமிடத்தையும், மயிலாடுதுறையை சேர்ந்த வீரர் ஜி.முகேஷ் ஆகியோர் மூன்றாமிடத்தையும் சொந்தமாக்கி கொண்டனர்.

75 கிலோ எடைப்பிரிவில் மற்றும் ஒரு சென்னை வீரர் ஆர்.கவித்திருமாறன் முதலிடமும், ஈரோடுவை சேர்ந்த வீரர் எஸ்.ரேணுகோபால் இரண்டாமிடமும், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஜி.சந்தோஷ்குமார் மூன்றாமிடமும் முறையே பெற்றனர்.

80 கிலோ எடைப்பிரிவில் காரைக்காலை சேர்ந்த வீரர் ஆர்.ராஜசேகரன் முதலிடத்தையும், மற்றும் ஒரு மதுரை வீரர் டி.மணிகண்டன் இரண்டாமிடத்தையும், திருச்சியை சார்ந்த வீரர் எஸ்.விக்னேஷ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
80 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப்பிரிவில் சேலம் வீரர் ஜெ.ரியாஸ்கான் முதலிடத்தையும், விருதுநகரை சேர்ந்த வீரர் கே.ரகுராமன் இரண்டாமிடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஜெ.சஜித் மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்ற காரைக்கால் வீரர் ஆர்.ராஜசேகரன் ஆணழகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த செய்தியை இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் எஸ்.ஜெகநாதன் அறிவித்தார்.