தமிழ் நடிகர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மகன் விஜய் பெயரில் கட்சி தொடங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு தற்போது அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டு விட்டது.
மேலும் நடிகர் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் அதற்கான ஆரம்ப கட்ட நகர்வுகள் தான் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் விஜய்-யின் திரைப்பட தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் இந்த சேனலில் தான் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்-யின் பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரபூர்வமாக இதை அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்-யின் ரசிகர்கள் இந்த சேனலை பின் தொடர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவ்தால் வருங்காலத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், இந்த சேனல் அவரது கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.