இந்தியாவில் மும்பை நகரத்தின் மிகப்பெரிய காபி ஷாப் நிறுவனத்தின் வலைதளத்தை ஊடுருவி திருடியதாக 17 வயது சிறுவன் பூஜ்ஜிய குற்ற பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் நன்னடத்தை பிணயத்தில் விடுவிக்கப்பட்டார்.
காபி ஷாப் நிறுவனத்தின் கணினி வலைப்பக்கத்திலிருந்து பணப் பரிமாற்றத்தை தனது நண்பருக்கு வேடிக்கைக்காக அச்சிறுவன் மாற்றியுள்ளதாக பூஜ்ஜிய குற்ற பிரிவு காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த சிறுவனின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் மேலும் கூறியதாவது: இந்த சிறுவன் ஒரு மிக புத்திசாலி மாணவர். நன்றாக படிக்கக்கூடியவர். அவர் தற்போது கணக்கியல் படித்து வருகிறார்.
மும்பையின் மிகப்பெரிய காபி ஷாப் நிறுவனத்தின் வலைதளத்தை இந்த சிறுவன் ஊடுருவி திருடியுள்ளார். இந்த சிறுவன், நாட்டின் பல்வேறு நகரங்களில் கிளைகள் வைத்துள்ள காபி ஷாப் நிறுவனத்தின் கணினி வலைப் பக்கத்திலிருந்து பணப் பரிமாற்றத்தை தனது நண்பருக்கு விளையாட்டாக மாற்றியுள்ளார். காபி ஷாப்பில் பொருத்தப்பட்டிருந்த தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மறைகாணி காட்சிகள் மூலம் இந்த சிறுவன்தான் அந்த நிறுவனத்தின் வலைதள கணக்கை ஊடுருவி திருட்டு வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காபி ஷாப் நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் இந்த சிறுவன் மீது சென்ற செப்டம்பம் மாதம் 28-ஆம் தேதி அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த சிறுவன் அவர் தனது நண்பர்களைக் கவரவும் விளையாட்டாகவும் இந்த செயலைச் செய்ததாக பூஜ்ஜிய குற்ற பிரிவு காவல் அதிகரியிடம் கூறினார். மேலும் அவர் யூடியூப் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த சிறுவன், சிறார் நீதிமன்றக் குழு முன் நிறுத்தப்பட்டார். பின்பு அவர் நன்னடத்தை பிணயத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் இரண்டு வருட காலத்திற்கு ஆலோசனை பெறும்படி சிறார் நீதிமன்றக் குழு அவரைக் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு பூஜ்ஜிய குற்ற பிரிவு அதிகாரி தெரிவித்தார்.