கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் அமைந்துள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டிருந்த அந்த நபர் உடல் பாதிப்புகள் காரணமாக அதிலிருந்து விலகிவிட்டார். மேலும் தனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகளுக்கு ரூபாய் .5 கோடி இழப்பீடு கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு கொரொனா தடுப்பு மருந்தின் பரிசோதனைகளை புனேவின் சீரம் நிறுவனம் மத்திய அரசின் நேரடி மேற்பர்வையில் நடத்துகிறது.
சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் இந்த தடுப்பு மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை அங்கு நடைபெற்றது. இதில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது மதிப்பு மிக்க ஆண் ஒருவர் பங்கேற்றுள்ளார். அவருக்கு சென்ற அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் கொரொனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அடுத்த பத்து நாட்களில் அவருக்கு உடல் நலம் பெரும் பாதிப்படைய ஆரம்பித்ததாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைவலி, உடல் அயற்சி, குடும்பத்தாரை கண்டறிய இயலாமை, அடிக்கடி கோவப்படுவது என பல சிரமங்கள் அவ்ருக்கு ஏற்பட்டுள்ளது. சென்ற அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே இழப்பீடாக தனக்கு ரூபாய் 5 கோடி வழங்குவதோடு இந்த சோதனையை உடனே நிறுத்துமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த அவரது வழக்கறிஞர் என் ஜி ஆர் பிரசாத் “தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன் அவர் வழக்கமாக தன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதன் காரணமாகவே அவருக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது” என்றுள்ளார். மேலும் இது குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை எந்த ஒரு விளக்கமும், பதிலும் அளிக்கவில்லை.