இந்தியாவின் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” என்ற நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதை சேர்த்துக்கொண்டிருப்பதனால் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் அருந்ததிராய்.
இது தொடர்பாக அவர் கூறும்போது “தனிநபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த, பொது விவாதம் இல்லாமல், இது ஒருபோதும் நடந்திருக்க சாத்தியம் இல்லை. அறிவுபூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சிக்கின்றன.
இந்த புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், பல அழுத்தங்களுக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.