விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி #HBDமேதகுPRABHAKARAN என்ற “ஹாஷ்டக்” (Hashtag) ட்ரெண்டாகி வருகின்றது.
இந்தியாவின் தமிழ் நாடு மற்றும் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள் இந்த ஹாஷ்டக்கை ட்ரென்டாக்கி வருகின்றார்கள். #HBDமேதகுPRABHAKARAN #HBDLeaderPrabhakaran66 #HBDதேசியத்தலைவர்66 #HBDTamilsLeaderPrabhakaran #தேசியத்தலைவர்66 போன்ற ஹாஷ்டக்கள் ட்விடர் மற்றும் சமூகவலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக முதனமையாகி வருகின்றது.
இலங்கை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாகக் கொண்டாடி வருகின்றார்கள். குறிப்பாக புலம் பெயர் தேசங்களில் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றார்கள்.
ப்ரிடிஷ், சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் இடங்களில் பிரபாகரனின் பிரமாண்டமான உருவப்படங்களை அமைத்து அவர்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள். மேலும் தமிழர்கள் பணிபுரியும் இடங்களில் வேறு இன மக்களுக்கு கேக் மற்றும் உணவுப் பண்டங்கள் பரிமாறி தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றார்கள் உலகத்தமிழர்கள்.