
1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு இந்து கோவிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் நிபுணர்கள், வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் கண்டுபிடித்துள்ளனர். பாரிகோட் குண்டாயில் அகழ்வாராய்ச்சியின் போது, நிபுணர்கள் இந்த கோவிலைக் கண்டுபிடித்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வாவின் தொல்பொருள் துறையின் ஃபஸல் காலிக் என்பவர், விஷ்ணுவின் 1300 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடித்ததை அறிவித்தார். பாகிஸ்தானின் (Pakistan) ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், விஷ்ணுவின் கோவில் என்று அவர் குறிப்பிட்டார். இந்த கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களின் இந்து ஏகாதிபத்திய ஆட்சி காலத்தில் இந்திய இந்துக்களால் கட்டப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

இந்து ஷாஹி அல்லது காபூல் ஷாஹி என்பது காபூல் பள்ளத்தாக்கு அதாவது கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் காந்தர் அதாவது இன்றைய நவீனகால பாகிஸ்தான் மற்றும் இன்றைய வடமேற்கு இந்தியாவை கி.பி 850-லிருந்து கி.பி 1026 -ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்ட ஒரு இந்து வம்சமாகும்.

அந்த அகழ்வாராய்ச்சியின் போது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த கோவில் இருக்கும் இடத்திற்கு அருகில் பல கோபுரங்களையும் கண்டறிந்துள்ளனர். இது தவிர, கோவிலுக்கு அருகில் ஒரு குளத்தையும் அறிவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது இந்துக்கள் கோவிலில் சென்று தொழுவதற்கு முன்பு பக்தர்கள் அங்கு நீராட பயன்படுத்தப்பட்டது என்று கூறுகிறார்கள்.

பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொல்பொருள் இடங்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்தப்பகுதியில் முதல் முறையாக இந்து அரச காலத்தின் பல தடயங்கள் கிடைத்துள்ளன என்று, ஆராய்ச்சியாளர் ஃபசல் கலிக் கூறியுள்ளார். இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத்தின் தலைவரான டாக்டர் லூகா, பாகிஸ்தானின் இந்த ஸ்வாட் மாவட்டத்தில் காணப்படும் காந்தர் நாகரிகத்தின் முதல் கோவில் இதுதான் என்று கூறியுள்ளார்.

ஸ்வாட் மாவட்டத்தில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இயற்கை அழகு, மத சுற்றுலா, கலாச்சார சுற்றுலா மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற அனைத்து வகையான சுற்றுலாவையும் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் முதல் 20 இடங்களில், ஸ்வாட் மாவட்டம் ஒன்றாகும். மேலும் பாகிஸ்தானின் ஸ்வத் மாவட்டத்தில் சீனர்களின் பௌத்த மத வழிபாட்டுத் தலங்களும் அங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.