ஜெர்மனி நாட்டில் உள்ள பேராசிரியர் ஒருவர் இணையதளத்தில் ஆண்குறி துண்டிக்கப்பட்டால் உயிருடன் இருக்க முடியுமா என்று சோதித்துப் பார்த்து அதன்பின் ஒரு மனிதரை கொலை செய்து உணவாக உண்ட குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியிலுள்ள பாங்கோவ் எனும் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கணிதம் மற்றும் வேதியியல் கற்று கொடுப்பவர்தான் பேராசிரியர் ஆர்.ஸ்டீபன். இவர் நரமாமிசம் உண்பதில் சிறிது ஆர்வம் உடையவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பாக ஒரு பூங்காவில் எலும்புகளுடன் சதை இன்றி புதியதாக உயிரிழந்த ஒரு மனித உடல் இருந்ததைக் கண்டு பூங்காவிலுள்ளவர்கள் உடனே காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து காவலர்கள் அங்கு வந்து அந்த எலும்புகளை எடுத்து மருத்துவர்களை வைத்து சோதனை செய்த காவல்துறையினர், இது தற்போது உள்ள புதிய எலும்பு என்று கண்டறியப்பட்டுள்ளதுடன், யாரோ அதனை சாப்பிட்டு உள்ளார்கள் என்பது குறித்தும் அறியப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சந்தேகிக்கப்பட்ட நபரான நரமாமிச உட்கொண்ட பேராசிரியர் சந்தேகத்தின் பேரில் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அவரது மொபைல் போனை பரிசோதித்ததில் ஆண்குறி துண்டிக்கப்பட்ட பிறகு ஒரு மனிதன் உயிர் வாழ முடியுமா என அவர் இணையதள பக்கங்களில் ஆராய்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து அவரது வீட்டில் துப்பறியும் நபர்கள் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஒரு குளிரூட்டி, சக்கர வண்டி ரத்த கறைகள் இருந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்தது மின் இணைப்பு தொழில்நுட்ப வல்லுனரான ஸ்டீபன்ஸ் ஸ்ட்ரோட்ச் என்பவர் தான் என கண்டறியப்பட்டது. அவரது ரத்தங்கள் தான் இவரது வீட்டில் இருப்பதாகவும் தடவியல் நிபுணர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.
மேலும் ஒரு டேடிங் இணையதளத்தில் இது குறித்து செய்திகள் பகிரப்பட்டதால், காவலர்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் தற்பொழுது கூறப்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து பேராசிரியர் கொலை செய்து நரமாமிசம் உண்ட குற்றதிற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தற்போது ஆழ்ந்த விசாரணை அவரிடம் போலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.