தமிழ்நாட்டில் திரு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசின் ஆட்சிமிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் வர இருக்கின்ற 2021-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க – வின் வேட்பாளராக திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை முழுமனதாக அறிவித்துள்ளனர் அக்கட்சியினர்.
இந்த நிலையில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் தி.மு.க, பீகார் காரரை வைத்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதோடு அதை தற்போது செயல்படுத்தியும் வருகிறது.
ஏற்கனவே பிரச்சாரம் என்ற பெயரில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டி, இதுவரை இரண்டு முறை திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது திரு உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள செயலால் “ஒத்த ஓட்டுக்காக இப்படியெல்லாமா செய்வீங்க?” என்று பல்வேறு தரப்பினரும் தி.மு.க.வினரை எள்ளி நகையாடி வருகின்றனர்.
ஏனென்றால் கடவுள் என்பதே இல்லை என்ற பெரியாரின் கொள்கையை தீவிரமாக பின்பற்றிவரும் கட்சிதான் தி.மு.க. இதனால் கோவில்களைப் பற்றியும், இந்து கடவுள்களை பற்றியும் சர்ச்சையாக பேசி பலமுறை சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர் தமிழக தி.மு.க.வினர். ஆனால் தற்போது தங்களது கொள்கைகளையெல்லாம் மறந்து தேர்தலுக்காகவும், இந்து மதத்தைச் சார்ந்த மக்களின் ஒத்த ஓட்டுக்காகவும் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்து சாமியார்களை சந்தித்து ஆசி பெற்று அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று கூறிவருகின்றனர் தி.மு.க.வினர். எனவே, உதயநிதி ஸ்டாலினின் இந்த செயலை பார்த்த பலர், “ஒத்த ஓட்டுக்காக இப்படியெல்லாமா செய்வீர்கள்? இந்து கடவுள் இல்லை என்று கூறும் உங்கள் கொள்கை எங்கே?” என்று தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், “இந்து மக்களுடைய உணர்வுகளை புண்படுத்தி விட்டு, தற்போது வந்து ஓட்டுக்காக கீழ்த்தரமாக இப்படி இறங்கியிருப்பது உங்களுக்கு அநாகரீகமா இல்லையா?” என்று விமர்சித்து வருகின்றனர் இணையதளவாசிகள்.